பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

67


நிலைகளைக் கடந்து ஆரம்பக் கல்விக்கு வந்தால் ஓரளவு பெற்றோரின் ஒத்துழைப்புக் கிடைக்கும். ஆயினும், ஆரம்பப் பாடசாலை நிலையில் ஆசிரியர்களும் சமூகமும் ஒத்துழைத்தால் அதிகத் தொல்லையின்றிப் பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெறமுடியும். இந்த நிலையில் நிதி நிலை வாய்ப்பாக இருக்காது. சமூகம் தான் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

2. ஆடு, மாடுகள் மேய்ப்பது கிராமப் புறங்களில் சிறுவர், சிறுமியர்களின் வேலை. இந்தப் பொறுப்பை ஊராட்சி மன்றங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். பொதுவாக கிராமங்களில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கும், படித்த பொறுப்புள்ள சமுதாய உறுப்பினர்களுக்கும் உள்ள அக்கறை அளவுக்குப் பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெறமுடியும். இதுதான் இன்றைய நிலை.

ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்பை எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவு பெற முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பயனடையத் தக்கவகையில் முதலுதவி, மனையியல், பொது அறிவு வகுப்புக்களை நடத்தலாம். பெற்றோர்கள் அன்றாடம் பள்ளியில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருக்கமான உறவும் தொடர்பும் இருத்தல் வேண்டும்.

பெற்றோர்கள் உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றில் பயிலும் மாணாக்கனை அவன் தங்கள் பிள்ளைகளாக இருந்தாலும்-சக வயதுக்கு வளர்ந்து வந்துள்ள அவர்களுடன் கலந்து பழகுதல் வேண்டும். விளையாட்டுக் களின்பொழுதும் நூல்களைப் படிக்கும் பொழுதும் அவர்களுடன் கலந்து கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களிடம் அடிக்கடி தொடர்புகொண்டு மாணாக்கர்களின் வாழ்க்கையை மேம்