பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வகுப்பினரின் சுயநலத்திற்கு ஆக்கம் சேர்த்ததால் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இது நீடிக்கும் என்று நம்பாதீர்கள்.

காலந்தாழ்த்தக்கூடாது

ஆங்கிலம் இந்திய நாட்டின் இணை ஆட்சிமொழியாக நாடாளுமன்றத் தீர்மானத்தின் வழி நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஆங்கிலம் - இந்தியாவின் இணை ஆட்சி மொழியாக நீடிக்குமா? எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? அமரர் நேருவின் உறுதிமொழி, "இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக - நீடிக்கும்" என்பதுதான். ஆக என்றாவது ஒரு நாள் இந்தி ஏற்கப்படும்; ஏற்கப்பட வேண்டும் என்பது முடிவு. நாம் இந்தியை எப்போதுமே ஏற்கமாட்டோம் என்றால் ஏற்றுக் கொண்ட உண்மைக்குப் புறம்பான செயலாகப் போகும் என்பதை அறிக. இன்று இந்தியாவில் தமிழ் நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் மும்மொழித் திட்டம் நடைமுறையில் இருக்கிறது; இந்தி கற்பிக்கப்படுகிறது. ஏன்? தமிழ் நாட்டில்கூட அரசு பள்ளிகளிலும் கிராமப்புறப் பள்ளிகளிலும் அதாவது தமிழ் வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளிலும்தான் இந்தி கற்பிக்கப்படுவது இல்லை. நகர்ப்புறங்களில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் இந்தியும் ஒரு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. ஆக தமிழ் நாட்டிலும் இந்தி படிக்கிறார்கள், முன்னேறியவர்கள் - முன்னேறக்கூடியவர்கள். தமிழ்நாட்டில் இந்தி படிக்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது. இவர்களே நாளை இந்தியை வரவேற்று நடைபாவாடை விரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏமாற்றம் பெரும்பாலும் கிராமத்து மக்களுக்குத்தான். எனவே ஆங்கில வழிக் கல்விப் பள்ளிக்கூடங்கள் மூடப்பெற்றால்தான் தமிழ் வளரும்; தமிழன் வளர்வான்; தமிழ்நாடு வளரும்; நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேற்றுமை அகலும். இல்லையெனில் தமிழ்நாட்டின் எதிர்