பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குருவாக இருந்தவர் பூ சுப்பிரமணியஈசான தேசிகர் என்பவர். இந்த மடத்தில் தயாரித்து உணவு வந்தது. உணவுடன் பாண்டிய நாட்டுக் குருக்கள் ஐயா, ஏஜெண்ட் நாராயணசாமி ஐயர் ஆகியோர் வந்தனர். அருகிலிருந்து உபசரித்தனர். நல்ல சுவையான உணவு, உணவு மட்டுமல்ல பாண்டிய நாட்டுக் குருக்கள் சாதுரியமாக ஆலோசனை கூறும்போது அவர்களின் துய அன்பினை அனுபவிக்கவும் முடிந்தது. ஆனால் அந்த அன்பு கந்தசாமித் தம்பிரானுக்குச் செரிமானம் ஆகவில்லை.

உணவுக்குப் பின் உரையாடல் தொடங்குகிறது! உரையாடலில் முக்கியமாக இடம்பெற்றவை குன்றக்குடி ஆதீன வரலாறு. குன்றக்குடி ஆதீனத்துக்கு இருக்கும் சொத்துக்கள் பற்றிய தகவல்கள், தகவல்களினூடே கந்தசாமித் தம்பிரானுடைய திறமையும் புகழப்படுகிறது. எல்லாவற்றையும் புரிந்துகொண்ட கந்தசாமித் தம்பிரான் "உறக்கம் வருகிறது” என்றார்.

வாழும்போது புகழப்படுதல் புகழல்ல அது முகமனேயாம் அல்லது எதிர்பார்ப்புக்குரிய கையூட்டேயாம். ஒருவர் இறந்தபின், இறந்தவரின் சமுதாய நடப்பியலுக்கு அவருடைய தேவையை, இருப்பை எண்ணிப் பேசும் புகழே புகழ். இன்றைய இந்தியாவின் நிலையில் பல நேரங்களில் இந்திய மக்கள் 'அண்ணல் காந்தியடிகள் இல்லையே, அமரர் நேருஜி இல்லையே' என்று ஏங்குகின்றனர்.

கந்தசாமித் தம்பிரான் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு நாயனக்காரர் கோபாலன் துணையுடன் புதுக் கோட்டைக்குச் செல்லும் பேருந்தைப் பிடித்து, பிரான் மலையிலிருந்து தருமபுரத்துக்குப் பயணம் செய்துவிட்டார். திரும்பக் குன்றக்குடிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டார்.

தருமபுரத்துக்கு வந்தவுடன் தருமபுர ஆதீனம் மகா சந்நிதானம் அவர்களைக் கண்டுக்கொண்டு குன்றக்குடி குரு