பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

231


களுக்கு உதவி செய்யமாட்டீர்கள்!" என்று பேசி விட்டோம். அவர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "டெப்பாசிட் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன். இப்போது என்ன செய்யவேண்டும்? உத்தரவு!" என்றார் அமைதியாக குன்றக்குடி மாதிரித் திட்டம் சிற்பிகளில் இந்த சீனிவாசனும் ஒருவர்! இப்போது சென்னையில் மாநில அலுவலகத்தில் விவசாயப் பிரிவில் பணி செய்கிறார். அன்றிலிருந்து இன்று வரை பாரத ஸ்டேட் வங்கி தாய்போல உதவி வருகிறது. மேலும் மத்திய வங்கி, இந்தியன் வங்கி, மதுரை வங்கி மற்றும் கனரா வங்கியும் உதவி செய்து வருகின்றன.

நம்முடன் கூடவே நடந்தும் ஓடியும்வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி! ஆனாலும் வேகம் போதாது என்பதை இவர்கள் உணர வேண்டும்.

பொது வாழ்க்கையில், இயக்க வாழ்க்கையில் நமக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பெயர்களைப் பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகும். எழுதியவர்களை விட எழுதாதவர்கள் அதிகம்! எல்லோருக்கும் நன்றி! நமது பயணத்தில் கூட வரும் கடமைப் பாடுடையவர்கள் கூட வராமல் முந்துவார்களாக!

சராசரி வாழ்வு நிறைவேறியிருக்கிறது. பல்வேறு களங்களில் பணிகளும் செய்யப்பட்டுள்ளன. மனநிறைவு இல்லாது போனாலும் மனக்குறையில்லை. ஆயினும் இலக்குகள் எட்டாக்கனிகளாகவே இருப்பது நெஞ்சை அழுத்துகிறது. நமது இலக்கு-குறிக்கோள் தற்சார்புடையது அல்ல. சமுதாய வரலாற்றுடன் தொடர்புடைய குறிக்கோள். அதாவது, வலிமையும் வளமும் வாய்ந்த சமுதாயம் அமைய வேண்டும். இந்த இலக்கை அடைய மார்க்ஸியமே சிறந்த வழி. மார்க்ஸியத்துக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாம் கடவுளை நம்புகிறோம். புதுமை நலஞ்சார்ந்த அப்பரடிகள் நெறியை நாட்டுநெறியாக்க இயலவில்லை. தமிழ்த்தந்தை திரு.வி.க.