பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


டன்னாக உயர்ந்துள்ளது. இது தவிரக் கோழிப்பண்ணை வளர்ப்புத் தொழிலால் 1961-ல் 650 கோடி ரூபாய் மதிப்பி லிருந்து, 1989-ல் ரூ. 34,540 மில்லியன் ரூபாய் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றையும்விட இந்தியாவில் கால் நடைகள் அதிகம். உலகத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையில் சற்றேறக் குறைய 21 விழுக்காடு நமது நாட்டில் உள்ள கால்நடைகள்.

கால்நடைகளில் முதன்மையானது பசு. நமது சமுதாய மரபுப்படி பசு, பூசனைக்குரியது. ஆயினும் பசுக்கள் வளமாக வளர்க்கப்படுவதில்லை.

நமது நாட்டில் 17.6 கோடி பசுமாடுகள் உள்ளன. எருமைகள் 5.3 கோடி உள்ளன. ஆக 22.9 கோடி மாடுகள். இவற்றில் காளை கிடா ஆகியவற்றைக் கழித்துக் கணக்கிட்டதில் 8 கோடி பால் மாடுகள் உள்ளன.

இந்த 8 கோடி பால் மாடுகளில் 24 இலட்சம் பால் மாடுகள்தான் தினசரி 2 லிட்டருக்கு மேல் பால் கொடுக்கின்றன. பாக்கி 56 இலட்சம் பால் மாடுகள் தினசரி 2 லிட்டருக்கும் குறைவாகவே பால் கறக்கின்றன.

நம் நாட்டுப் பசுக்கள் வருடம் சராசரி 175 கிலோ கிராம்தான் பால் கறக்கின்றன. எருமைகள் வருடம் சராசரி 440 கிலோ கிராம் பாலே கறக்கின்றன. இந்த அளவு, அறிவியல் சார்ந்த முயற்சியால் 5431 லிட்டராக உயர்த்தப் பெற்றுள்ளது.

நமது தமிழ்நாட்டில் 107.75 இலட்சம் பசுக்களும் 2879 இலட்சம் பால் கறக்கும் எருமைகளும் உள்ளன. தமிழ் நாட்டில் ஒரு பசுமாடு ஓர் ஆண்டுக்குக் கொடுக்கும் பாலின் சராசரி அளவு 200 லிட்டர்; ஓர் எருமை 283 லிட்டர். ஓர் ஆடு 20 லிட்டர். ஆயினும் நம்முடைய தேவையை நோக்க, பற்றாக்குறையே!