பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/415

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

403


இதுவே நடைமுறையில் சாத்தியம்; அப்படி எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்தல் வேண்டும்; போராட வேண்டும்.

இலட்சியம் என்பது பெரும்பாலும் நாட்டையும் மக்கட்சமுதாயத்தையும் மையமாகக் கொண்டுதான் அமையும். மற்ற உயிர்க்குலத்தை மையமாகக் கொண்டு இலட்சியம் தோன்றலாம். மொழி, சமய அடிப்படையிலும் கூட இலட்சியம் தோன்றலாம். எடுத்துக்கொண்ட இலட்சி யத்தை அடைவதற்கேற்றவாறு தன்னுடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இலட்சியம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. கடந்த காலத் தோல்விகளையும் துன்பங்களையும் மறத்தல், தன் முன்னே நிற்பனவற்றை நாடுதல், நிகழ்காலத்தை மதித்தல், எதிர்காலத்தை நோக்கி விரைந்து பணி செய்தல் முதலிய குணங்கள் வேண்டும்.

பழக்கம், குணத்திற்கு அடிப்படை, குணம், இலட்சியத்தை இனம் காட்டும். எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்குரிய பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்க! எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காகப் போராடு! உயிரைக் கொடுத்துப் போராடு!

வெறும் சோற்றுப் பிண்டமாக நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட இலட்சியத்துடன் சில ஆண்டுகள் வாழ்ந்தாலே போதும். வரலாற்றில் செய்திகளில் இடம் பெறுவது இலட்சியம் அல்ல, நீயே நாட்டின் வரலாற்றை உருவாக்க வேண்டும். அதுவே, இலட்சியம் நிறைந்த வாழ்க்கை! தெளிவான இலட்சியத்தைத் தேர்வு செய்து கொள்க! அந்த இலட்சியத்திற்காகப் போராடுக ! இடையூறின்றிப் போராடுக! இலட்சியமே வாழ்வென வாழ்க!

வாழ்க்கை, முன்னர்க் கூறியபடி அறிவு சார்ந்தது; அறிவியல் சார்ந்தது. புலன்கள் அனைத்தும் அறிவை