பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/472

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



இவ்வாசிரியர் நூல்களை வழக்கமாக மிக்க சிறப்புடன் அழகாக வெளியிட்டு வரும் கலைவாணி புத்தகாலயத்து முதல்வர், நிறைநாட் செல்வர், சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இச்செல்வத்தையும் மற்ற எட்டுச் செல்வத்தையும் எய்தி நன்கு வாழ்க!

சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக
பரமாசாரிய சுவாமிகள்

மெய்கண்ட தேவர் ஆதீனம்
காஞ்சிபுரம்

4. வாழ்க்கை விளக்கு


1972-ஏப்ரல்

மு கண்ணப்பன்

தமிழ்நாடு அரசு

அறநிலைய அமைச்சர்

தலைமைச் செயலகம்

சென்னை-9

5-4-72.

சமயத் துறையிலும், சமுதாயத் துறையிலும் சீரிய பணியாற்றி வரும் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களை அறியாதார் இல்லை. அவர்கள் சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே கைவரப் பெற்ற சிறந்த சிந்தனையாளர். சமயத் துறையில் புதைந்து கிடக்கும் சீரிய கருத்துக்களை யெல்லாம் சிறந்த நூல்வடிவாகவும், சொற்பொழிவுகளாகவும் தமிழகத்திற்கு அளித்து, தமிழுக்கும் தமக்கும் பெருமை தேடிக்கொள்பவராவர்.

இன்றைய சமுதாயத்திற்குப் பெரிதும் இன்றியமையாக் கருத்துக்களைத்தான் "வாழ்க்கை விளக்கு" என்ற நூல் வடிவாக வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். வள்ளுவம் உலகெங்கணும் பரவி வாழ வேண்டும். அதனால் தமிழகம் பெருமை ஈட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக வள்ளுவருக்கு விழாக் கொண்டாடி மகிழ்வதோடு, உலகப் பொது நெறியாக மலருவதற்கு நாம்