பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/534

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

522

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


குன்றக்குடி அடிகளார் அவர்களின் அரிய படைப்புக் களையும், பாரத ஒருமைப்பாட்டிற்கும், தமிழகப் பண் பாட்டிற்கும் புகழ் சேர்க்கும் படைப்புகளையும் மட்டுமே வெளிக்கொணருகின்ற கலைவாணி புத்தகாலயத்தின் பதிப்பாசிரியர், நண்பர் சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நம்முடைய பாராட்டுதலுக்கு உரியவராவார்கள்.

திருவள்ளுவர், அப்பர், திருஞானசம்பந்தர், குமர குருபரர் முதலிய மறை நூல் ஆசிரியர்களின் நுணுக்கமான சிந்தனைகளை அடிகளார் அவர்கள் புரட்சிப் புதுமையில் விளக்கம் செய்வதோடு, டாக்டர் அம்பேத்கார், ஜே.சி. குமரப்பா போன்ற மாமேதைகளின் அறிவுச் சுரங்கத்தில் இருந்து புதையல் எடுத்து புதிய புரட்சிகரமான ஒருமைப் பாட்டுச் செய்திகளை எல்லாம் தவத்திரு அடிகளார் அவர்கள் மிகச் சிறந்த தமிழ் நடையில் தந்துள்ளார்கள்.

எல்லோரும் தவத்திரு அடிகளார் அவர்களின் உயர்ந்த கருத்துக்களைச் சிந்திக்க வேண்டுகிறேன்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இலக்கணமாகத் திகழும் தவத்திரு அடிகளார். அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

சென்னை-35 திருக்குறளார்
9-12-92


21. சிலம்புநெறி


1993 டிசம்பர்

அணிந்துரை


நதி அரசர் பி. வேனுகோபால்


தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு அறிமுகமானவர். சிறந்த தமிழ்