பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/559

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

547


வறுமை நீங்கிடப் புறப்பட்ட இலட்சியப் பயணம்-தொடர் பயணம்! புரட்சிச் சுடர்பிடித்துத் தடம் மாறாத, இலட்சியப் பயணம் என்றும் தொடரும்.

வாழ்க மனிதநேயம்
(மண்ணும் மனிதர்களும்)


கவியரசர் முடியரசனார்
தொழத்தகு சுந்தரன் தோழமைக் குரியன்
பழுத்த பாவலன் பாரோர் போற்றும்
வலிய தொண்டன் வஞ்சமில் நெஞ்சும்
மெலிபிறை சூடிய மேன்மைக் கொடைஞன்
கண்ணுதற் பெருமான் கருத்தும் பிணைந்தது
பண்ணுறத் தோய்ந்த பைந்தமிழ் ஒன்றால்;
அதுபோல்,
குன்றக் குடியிற் குடியமர்ந் ததுமுதல்
என்றன் செந்தமிழ்ப் பாட்டால் இணைந்தவர்
ஈடுபட் டென்னைக் 'கவியர' சென்றனர்,
பீடுடை அடிகள் பெயருக் கேற்றவர்
நாடுயர் வழிகள் நல்கிய பெருமகன்,
மண்ணிற் புழுவென மடியாது மாந்தர்
மண்ணில் நிமிர்ந்து வாழச் சொன்னவர்,
எளியோர்க் கிரங்கும் இளகிய நெஞ்சர்.
எளிமையும் வறுமையும் இருப்பதை நாடார்,
உழைப்போன் வயிற்றில் உறுபசி வந்து
வளைத்து வாட்டி வருவது தாளார்,
ஆலயம்பதி னாயிரம் எழுப் புவதின்
மேலாம் கல்விச் சாலை எழுப்புதல்
எனப்பறை சாற்றும் இயல்பினர், தொழில்கள்