பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/564

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

552

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


எனும் பாவேந்தரின் இப்பாடலடிகளின் கருத்தே அடிக ளாரின் வாழ்வு நமக்குத் தரும் பாடம்.

"வாழும்போது புகழப்படுதல் புகழ் அன்று. அது முகமனே ஆகும். அல்லது எதிர்பார்ப்புக்குரிய கையூட்டே யாகும். ஒருவர் இறந்தபின், இறந்தவரின் சமுதாய நடப்பிய லுக்கு அவருடைய தேவையை, இருப்பை எண்ணிப் பேசும் புகழே புகழ்-புகழுக்கு அடிகளார் தந்துள்ள விளக்கம்.

நாட்டின் இன்றைய அவலங்களை எண்ணும் போது அவற்றை களைய அடிகளார் இல்லையே என்று நாம் எண்ணும்படியான புகழ் வாழ்வு வாழ்ந்திருக்கிறார் அடிகளார்.

பக்கத்திற்குப் பக்கம் அடிகளாரின் திருவுருவை திகட்டா வண்ணம் எடுப்பாக வெளியிட்டு 'ஆனந்த விகடன்' வார இதழில் வெளியான தொடர் கட்டுரையைத் தொகுத்து அழகுற நூலாக்கியிருக்கிறார் அருமை நண்பர் கயல் தினகரன்.

அடிகளார் அவர்களிடம் நீண்ட காலம் அணுக்க மாகப் பழகியதோடு, அடிகளாரின் மனித நேயம் பற்றியும், அவர் திருத்தொண்டுகள் குறித்தும் ஏராளமான செய்திகளை இதயத்தில் வைத்திருக்கிறார் கயல் தினகரன். அவைகளை எழுதி வடித்து எதிர்காலச் சமுதாயம் ஏற்றம் பெற நூலாக்கித்தர வேண்டும் என்பதே நம் அவா.

அடிகளாரின் புகழ் போற்றி, அவர் வழி நின்று நாம் கடமையாற்ற உறுதி பூணுவோமாக!