பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

115


செவிமடுக்க மறுக்கிறார்களே! வாய்ப்பூட்டுப் போடுகிறார்களே! திருவள்ளுவர்,

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

என்றார்.

ஆலைப் பெண் தொழிலாளர் தங்கியிருந்த ஒரு விடுதிக்கு லெனின் சென்றிருந்தார். அப்பொழுது தொழிலாளர்கள் லெனினிடம் பல் செய்திகளைச் சொல்லுகிறார்கள். அவ்வளவையும் லெனின் மிகக் கவனத்துடன், அறிவு வேட்கையுடன் கேட்கின்றார். உலகு முழுதும் அவரிடத்திலிருந்து அறிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மற்றவர்களிடமிருந்து அறிவைத் தாகத்துடன் எதிர்பார்ப்பதைப் பெருமைக்குப் பெருமை என்றுதான் சொல்லவேண்டும். இதனை, 'ஒசிவாணிக்கோ' என்ற பெண் தொழிலாளி சிறப்பித்துப் பாராட்டுகின்றாள்.

"The man from whom the whole world learnt the truth, himself learnt from the people."

என்பது அவள் கூறியது.

தாமரைக் குளத்தின் தண்ணிர் அளவு உயர்ந்தால் தாமரையும் உயரும். அப்பொழுதும் தாமரை தண்ணிர் அளவுக்கு உய்ர்வதே இயல்பு. அதுபோல, சமூதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயர உயரத்தான் தனி மனிதனின் வாழ்க்கைத் தரமும் உயரவேண்டும். அப்படியல்லாமல் தனி மனிதனின் வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்து, சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்தில் கிடக்குமாயின் அஃது ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை, அதுமட்டுமன்று. மேலும் மேலும் ஒழுக்கத்தைச் சீர்குலையச் செய்து மனித சமுதாயத்தை ஆழ்ந்த துயரத்தில் அழுத்துவதாக அமையும். லெனின் இந்தத் தத்துவத்தைச் சிந்தனையில் இந்த உலகத்திற்கு உணர்த்தி