பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னுடைய வருவாயில் தன்னுடைய பொறுப்புக்கள் கடமைகள் அனைத்துக்கும் ஏற்றவாறு பங்கிட்டுக் கொள்வது அவசியம். அதிலும் தனிமனிதன் தன்னுடைய வருவாயில் ஒருபங்கைச் சமுதாயத்திற்கென்று ஒதுக்கவேண்டும். அந்தச் சமுதாய நிதி; சமுதாய அளவில் பரவலாகப் பலருக்குப் பயனுறத்தக்க வகையில் பயன்படுத்தப் பெற வேண்டும்.

இதனை,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அன்பு நெறி

கடவுளை இந்த உலகத்தில் காணோம். கடவுள் காண முடியாத பொருளா? வெற்றுக் கண்ணாடியில் முகம் தெரியுமோ? அதுபோல வெற்று மனிதர்கள் கடவுளைக் காணமுடியுமா? வடிவத்தில் தேங்காய். ஆனால் உள்ளீடில்லை. அதற்கு ‘வெறும்பாடைக்காய்’ என்று பெயர். காயில் மட்டுமா வெறும்பாடை? மனிதரிலும் ‘வெறும் பாடைகள்’ உண்டு. காயில் வெறும்பாடைக்காய் அடுப்பெரிக்கவும், ஆக்கவும் எரிபொருளாகப் பயன்படும். வெற்று மனிதரோ எரிபொருளாகக் கூடப் பயன்படமாட்டார்கள். அவர்களை எரிக்கவே வேண்டியதிருக்கிறது. ஆருயிர்க்கு அழிவற்ற உடலோடு இயைபு ஏற்பட்டதே அன்பு கொண்டு ஒழுகவேயாம். மனிதனுக்கு உயிர் உண்டு; உயிர்சார்ந்துலவும் உடலு முண்டு. இவற்றிற்கு மேலாக உயிர்த்தன்மையும் உண்டு. ஆனால் இன்று பலருக்கு உடல்மட்டுமே தெரிகிறது; உடல் தேவைகளையே தேடி அலைகின்றனர்; உயிரை மறந்தே விட்டார்கள். உயிரையே மறந்த பிறகு உயிர்த்தன்மை இருக்குமா என்ன? ஒருமனிதனுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதற்கு அளவுகோல் அவன் உண்டு திரிந்து