பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

175



வறிதே பொருதற்க!

யிரின் இயல்பு இகலுதல். யாரோடாயினும் எவ்வகையிலாயினும் போராடாது வாழ்தல் உயிருக்கு இயல்பன்று! போர் அல்லது பொருதல் முழுமையாகத் தீதா அல்லது நன்றா என்ற வினாவிற்கு விடைகாணுதல் எளி தன்று. போர், நன்றாதலும் உண்டு; நன்றும் தீதும் போருக் குரிய காரணத்தைப் பொறுத்தவை.

வள்ளுவர் ஒரு வாழ்வியற் கவிஞர். அப்பட்டமான தத்துவமலையில் மோதி, வாழ்க்கை வறிதே கழிவதில் வள்ளுவருக்கு விருப்பமில்லை. அதனாலன்றோ "நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு” என்றும், "பொய்ம்மையும் வாய்மையிடத்த" என்றும் அவர் அறம் பேசுகின்றார்.

போர்க்குணம், உயிரின் இயற்கைதான்! ஏன்? போர்க்குணம் இல்லாத மனிதன் ஒரு நடைப்பினமே! ஆனால், போர் யாருடன்? எப்படி? என்பதுதான் கேள்வி! - ஒவ்வொரு மனிதனும் அன்றாடம் தன்னுடைய மனத்தோடு கூடப் போராடவேண்டும். அவனை எதிர்த்துப் போரிட்ட அழுக்காற்றினை, அவாவினை, வெகுளியினை ஒடுக்கி வெற்றிகாண வேண்டும்.

உலகியலை முழுதாக உணர்ந்த வள்ளுவர் "அழுக்காறு என ஒருபாவி” என்று கூறுவதன் உண்மை, அறிவுணர்வுடன் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் ! ஒவ்வொருவருடைய மனமும் பிறிதொன்றைப் பார்த்து அழுக்காற்றில் அலைவதை மறுப்பார் உளரோ? ஒருகால், ஒரு சிலருடைய அழுக்காறு, வெகுளி-இன்னாச்சொல் என்ற அளவிற்கு வளராமல் இருக்கலாம். ஆனால், அழுக்காறு இருப்பது என்பது என்னவோ உண்மை, அழுக்காற்றின் வழிதான் அவா. தோன்றுகிறது. பொருள் நுகர்வு வேட்கை, தேவையினால், மட்டும் தோன்றுவதன்று. "அவரை'. 'இவரைப் பார்த்துத் தான் அல்லது கேட்டுத்தான் அவா தோன்றுகிறது. அவா, எரியும் பெரு நெருப்பினை நிகர்த்தது. அதிலும், குப்பை