பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழித்துச் சுவைத்த மனிதர்கள் பலர்! மலையனைய மனிதரைக்கூட அது வீழ்த்தியிருக்கிறது! இந்த அதிகாரப் பேய் பிடித்து ஆட்ட, கொடுத்த தெய்வத்தோடேயே இகலி நின்றான் சூரன்! முடிவு, உங்களுக்குத் தெரிந்ததே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ நினைந்திடுவோர் வெகுளி தவிர்த்திடுக! இகலுதலைத் தவிர்த்திடுக! காரண மின்றியும் வலிந்து இகலி வருவோரிடமிருந்து ஒதுங்கி வாழ்க! எவ்வகையிலும் இகலுதல் நன்றன்று! பொருதல் புண்ணியம் சேர்க்காது! வெகுளியையும் போர்க்குணத்தையும் அறவே விடமுடியாவிடில், நம்மையே நோக்கிப் போரிடுவோம்! நம்முடைய வாழ்வியல் நோக்கத்தோடு ஒத்துவராது நம்மொடு பொருதுகின்ற பொறிகள்- புலன்களொடு போரிடுவோம்!

அத்தகு பகை மாற்றமுடியாததாயின் அப்பகையின் வலிமையை நிகர்த்த வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொள்க! ஒத்த வலிமை ஒர்ந்து கண்டபின் பகை மேற்கொள்க! வெற்றி கிடைக்கும்! வீழ்ந்தாலும் விழுப்புண் கிடைக்கும்! மெலியாராக இருந்து புண்படுதல் பகைவர்க்கு இகழ்ச்சியையும், தமக்குப் புகழ்ச்சியையும் தருவது. பகைவர்க்கும் இகழ்ச்சியைத் தரக்கூடாது. வீரத்தில் விழுப்புண்பட்டுத் தாங்கி இன்னாரை வென்றான் என்ற பெரும்பகைச்சிறப்பைப் பகைவர்க்குத் தருதல், பகை யிலும்-பகைவழிப்பட்ட மரணத்திலும் தரும் கொடை!

எக்காரணத்தைக் கொண்டும் தம்மின் மெலியாரோடு மோதற்க! அஃது அறமன்று, ஆண்மையுமன்று புகழுமன்று புண்ணியமுமன்று.

<poem>இகல்காணான் ஆக்கம் வருங்கால், அதனை மிகல்காணும் கேடு தரற்கு,

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தகவில்லாத் தாவில் விளக்கம் தரும்.</poem>