பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வான்புகழ்கொண்ட தமிழ்நாடு” என்று பாராட்டுகிறார். வள்ளுவரின் அருமை மொழிகள் மேற்றிசை நாடுகளில் விரும்பப்படுகின்றன. ஆனால், ஒரு சில இளைஞர்கள், ஒரு சில பெருமக்கள் மேல்நாடு முன்னேறுகிறது என்றும், தமிழகம் மட்டும் இன்னும் பண்டைய நிலையிலிருந்தே வாழ்கிறது என்றும் கூறுகிறார்கள் அல்லவா? எனினுங்கூட, அவர்களுடைய அறிவுத் திறன் எவ்வளவுதான் எட்டிச் சென்றிருந்தாலுங்கூட வள்ளுவரின் வழிஇல்லை என்றுதான் சொல்லவேண்டும். வள்ளுவர் கண்ட கண்டு வாழ்ந்த நிலை, சமய வாழ்க்கை முறைகளெல்லாம் மேல் நாட்டு அறிஞர்களின் கருத்துக்கு அகப்படவில்லை. அப்படி வாழ்ந்து காட்டவும் அவர்களால் முடியவில்லை. ஆகையால் அந்தப் பெருமையை நாம்பெறத்தான் வேண்டும். இந்த நிலையில் தான் 'செந்தமிழ்நாடெனும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே' என்று பாரதியார் சொல்லியது போல வள்ளுவர் பிறந்தார். அவர் புகழோடு வாழ்ந்து பூரண மனித நிலையில் வாழ்விக்க வேண்டும் என்று விரும்பிய ஞானப் பெருஞ் செல்வர். இந்த நாட்டிலே பிறந்து அருமையான முறையை ஆக்கித் தந்த ஒன்றின் காரணமாகவே இந்தப் பெருமையைப் பெற்று விளங்குகிறார். அந்தக் காரணத்தினாலே தமிழகத்தின் பெருமை இமயத்துக்கு அப்பாற் சென்று புகழ் தருகிறது என்று சொல்லலாம். அவரை மனங்குளிரப் பாராட்டி மகிழத்தான் வேண்டும்.

இந்த நிலையில் தமிழ் மதுரையைப்பற்றி எப்பொழுதும் ஒரு நினைவு நமக்கு உண்டு. திருவள்ளுவப் பெருந்தகையார் சொல்லுகிறார்,

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

என்று. உணர்ச்சியளவிலே, உள்ளத்தளவிலே எத்தனையோ பெருமக்கள் ஒன்றுபட்டு வாழ்கின்ற காட்சியை இந்த