பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பண்பாடு நிறைந்த வாழ்க்கை-அறநெறி வாழ்க்கை அமையப்பெறவில்லை என்பதை நினைந்து வருந்தத்தான் வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழகம் அறநாடாக அறம் வழங்குகின்ற பூமியாக, அறத்தின் தாயகமாக, பிறருக்கு வழங்குகின்ற பெருந்தகையாளரின் உறைவிடமாக இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாய்க் கூறலாம். இந்தச் சூழ்நிலையிலே வளர்ந்த வள்ளுவர் தமக்குப்பின்னே வருகிற தமிழ்ச் சமுதாயம் சீற்றம்புரியக் கூடாதே என்ற பெருநோக்கங் கொண்டு பெருநூலை ஆக்கித் தந்தார். ஒவ்வொன்றையும் பத்து முறைகள் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார். திருக்குறளைப் புகழ்ந்து கூறும் 'திருவள்ளுவ மாலை என்ற ஒரு நூல் உளது. பதினோராண்டுகளாக உங்களிடையே பணிபுரிந்த இக்கழகத்தில் திருவள்ளுவ மாலையைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை.

ரெவரண்ட் பெர்சிவல் சொல்லுகிறார், வள்ளுவரைப். போல் அழுத்தந்திருத்தமாக அறம் எடுத்துக் கூறியவர்கள் இல்லை; திருக்குறளை ஒப்ப ஒரு நூல் மக்களாகப் பிறந்து வேறு எந்த மொழி பேசுகின்ற மக்களிடத்தும் அமையப் பெறவில்லை" என்று.

ஹீஸ் என்ற ரோமாபுரிக்கவிஞர் இலக்கியத்தைப் பற்றி மதிப்பிடுகின்றார். அக்கவிஞர் "உனது இலக்கியத்தைப் பொது மக்கள் முன்னிலையில் குறைந்தது ஒன்பது ஆண்டுகளுக்கு வை; அதற்குப் பிறகும் மக்கள் அதை விரும்புவார்களானால் உனது இலக்கியம், சிரஞ்சீவி இலக்கியம் என்று சொல்” என்கின்றார். ஒன்பது அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகள், ஏன்? காலத்தையெல்லாம் கடந்த ஒரு நூலாக வேறு எந்த நூலும் இத்துணைக் காலத்துக்கு இருந்தது இல்லை; மொழி பெயர்க்கப்பட முடியாதவளவில் தொண் ணுாறு மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்ட ஒரு பெரும் நூலாகத் திருக்குறள் காட்சியளிக்கிறது என்று எண்ணுகிற