பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்னைக்கு ஏற்படுகின்றது. புகழ் படைத்த செல்வர்களாக நம் மக்கள் இல்லையே என்றுவருந்துகின்றாள்; துன்புறுகின்றாள். அவள் விடுகின்ற மூச்சு பெருமூச்சாக-வெப்பக் காற்றாக ஆகிவிட்டது. மேகம் திரண்டு வருகின்ற பொழுது குளிர்ந்த காற்று அதன்மேல் வீசினால் மழைபெய்யும் என்று பள்ளியில் பால பாடத்தில் படிக்கின்றோம். அங்கே குளிர்ந்த காற்றுப் போகமுடியாத நிலையில் எங்ங்னம் மழைபெய்யும்? நிலமகள் தான் வெப்பக் காற்றுவிடுகின்றாளே! இவ்வளவும் எண்ணித்தான் வள்ளுவர் இங்ங்ணம் சொல்லியிருப்பார் என எண்ணுகின்றோம்.

வசையிலா வண்பயன் குன்றும் எனத்தொடங்கும் இந்த அருமையான திருக்குறளை நினைந்து நினைந்து வாழ வேண்டும்.

திருவள்ளுவருக்கு மாளிகை எடுக்கவேண்டுவது இன்றியமையாததொன்று. அதற்கு முன்னே திருவள்ளுவர் கண்ட ஒழுக்க நெறிக்கு, வாழ்க்கை நெறிக்கு, அறநெறிக்கு மக்கள் உள்ளத்தில் அறமாளிகை எடுக்கவேண்டுவது மிக இன்றியமையாததொன்று என்பதை நினைவுபடுத்த வேண்டும். அந்த அக மாளிகை எழுகின்ற காலத்திலே வள்ளுவரின் புற மாளிகையும் தானாக எழுந்துவிடும் என்ற நம்பிக்கை உண்டு.

பாரதியார் பாடலில் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் என்ற அடிக்குப் பலரும் பலவாறு பொருள் சொல்வர். இது பற்றிச்சிலர் 'பாரதியார் ஆலயங்கள் கட்டுவதை வெறுத்தார். அவர் கண்டு காட்டிய தருமம் எழுத்தறிவித்தல்தான். அன்ன சத்திரங்களும் வேண்டாம் என்று கூறினர். பாரதியார் வெறுப்புணர்ச்சியால் ஆலயங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருப்பினும் மக்களுக்கு அங்குச் சென்று வழிபடும் அறிவு