பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

193


படுத்துகின்றோம். அதனால்தான் தமிழகம் வாழமுடியும் தமிழகத்தின் கண்ணே பிறந்துவளர்ந்த நாமும் பெருமை யுடன் வாழமுடியும் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் நினைவுபடுத்துவதெல்லாம். கேட்டுக்கொள்வதெல்லாம் "வள்ளுவரைப் படிக்க வேண்டும்; அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே. திருவள்ளுவர் எத்தனை ஆணிகள் அறைந்துகூறுகிறார் பாருங்கள்!

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

ஒவ்வொரு சொல்லுக்கும் உட்பொருள். திருக்குறள் படிக்கவேண்டிய நூல்; படித்து அனுபவிக்கத் தக்க நூல். பிரான்சிஸ் பேக்கன் என்ற பேராசிரியர் ஒருசில நூல்கள் பார்க்கத்தக்கவை. ஒரு சில நூல்கள் படிக்கத்தக்கவை. ஒரு சில நூல்கள் படித்து அனுபவிக்கத்தக்கவை என்று சொல்லு கிறார். இந்த அருமைகளெல்லாம் நிறைந்துள்ள நூல் ஒன்றி ருக்கிறது என்று சொன்னால் அந்நூல் திருக்குறள். அது பெரும் நூல். அதைப் படித்து அனுபவிக்கவேண்டும். அதன் நெறி நின்று வாழ முயற்சிசெய்ய வேண்டும். என்னுடைய நோக்கம் முழுதும் இதுதான். அந்த நெறியில் நின்று வாழ ஆசைப்படுவோமானால்,

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

என்பது உணரலாகும். அறிவுள்ளவர் வாய்ச்சொல் என்று கூறவில்லை; ஒழுக்கமுள்ளவர் வாய்ச்சொல்தான் உதவும் என்று கூறுகின்றார். ஆதலால் வள்ளுவர் கண்ட ஒழுக்கநெறி இந்த நாட்டில் வளர வேண்டும். இது வளராத நிலையில் எது வளர்ந்தாலும் பயனில்லை. இந்த வளர்ச்சியில்லாமல் 'தமிழ் மகன் என்று சொல்லிக் கொள்ளக்கூடக் கொஞ்சம் அச்சமாகத்தானிருக்கிறது. - 江·13,