பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



எல்லோரும் சொன்னார்களோ, அவர்களைப் பார்த்துத் திருவள்ளுவர் சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இலக்கியத்தைப் படிக்கும்போது திருவள்ளுவர் அவர்கட்கெல்லாம் முற்பட்டவர் என்று அறியப்படுகிறது. இதை அறிஞர்கள் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அறிவுத் துறையிலே, ஆராய்ச்சித் துறையிலே, உணர்ச்சித் துறையிலே வளர்ந்த பிறகு அவர்களுடைய எண்ணம் ஒன்றாக இருக்கிறது. திருவள்ளுவரை வைத்து சாக்ரடீஸ் சொன்னார் என்றும் சாக்ரடீஸை வைத்துத் திருவள்ளுவர் சொன்னார் என்றும் எண்ணவேண்டாம். அந்த உள்ளமும் உயர்வை, உண்மையை எண்ணிற்று. இந்த உள்ளமும் உயர்வை, உண்மையை எண்ணிற்று. அவர் வாழ்ந்த சூழ்நிலை வேறு. இவர் வாழ்ந்த சூழ்நிலை வேறு. எனினும் உணர்ச்சியால் ஒன்றுபடுகிறார்கள். இக்கருத்தினை எத்தனையோ இடங்களில் சிறப்பாகச் சொல்ல ஆசைப்படுவதுண்டு.

இந்த நாட்டிற்கு அடுத்த முறையில் அறத்துறையிலே, பண்பாட்டுத் துறையிலே, பெயர் பெற்ற நாடு கிரேக்க நாடு. அதற்கு அடுத்த நிலையில் சீனா இடம் பெறுகிறது. கன்ஷியஸ் நூலில் வள்ளுவர் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவரும் வள்ளுவரைப் போல் அறம் என்று சொல்லுகிறார்; அறம் தென்றல் என்று கூறுகிறார். அறம் அல்லாத வற்றை வாடை என்கிறார். தென்றல் உடலுக்கு வளம் தருகிறது; வாடை வருத்து கின்றது, இதையே தான் திருவள்ளுவரும் பேசுகின்றார். அந்த நாட்டுப் பெருமக்கள், அறிஞர்கள் உணர்ச்சியால் நம் திருவள்ளுவர் கண்டவற்றை கண்டிருக்கின்றனர். ஆனால் அது காலத்தால் முற்பட்ட எண்ணமாக இருக்கலாம். எனினும் தமிழ் நாட்டு நாகரிகம்போல் பல நாடுகளிலும் இருந்துதான் வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனிதாகப்