பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

209


வுலகம் புகும்” என்றார். இவ்வாறு திருவள்ளுவர் துறவியாக இருந்துதான் சொன்னாரோ என்று எண்ணுவதுண்டு. இவற்றைப் பார்க்கும்பொழுது இல்லறத்தைவிடத் துறவறமே சிறந்ததென்று தெரிகிறது.

இல்லறத்திலிருந்து துறவறத்திற்கு வருபவன் எல்லாவற்றையும் அனுபவித்துத்தானே வரவேண்டும். இவ்வாறு வருவதாயிருந்தால் 'கூடா வொழுக்கம்' என்று சொல்வானேன். திரும்பவும் ஆசை வரலாம். அந்த ஆசைவரினும் அதைக் கூடாவொழுக்கம் என்று சொல்லவேண்டுவதில்லை. அந்தத் துய்மையோடு நின்றுவந்ததால்தான் அவன் மனம் திருந்தும். ஆகையால்தான் கூடாவொழுக்கம் என்று வற்புறுத்துகிறார். இல்லறத்திற்குப்பின் துறவறம் வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் இல்லறமில்லாமலே துறவறம் உண்டு. இல்லறத்திலிருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழ் நாட்டுச் சமயநிலையங்களிற் கூடத் திருமண்ம் ஆகாதவர்களுக்குத் தான் பட்டம் உண்டு. திருவள்ளுவர் முதலில் ஒழுக்கத்திற்கு இடங்கொடுத்தார். இந்நாட்டில் சிலர் துறக்காமல் இருக்கிறார்களே அது எதற்காக என்று கேட்கின்றார்? வேலை செய்கிறவன் உயர்ந்தவனா? வேலைவாங்குகின்றவன் உயர்ந்தவனா? வேலை வாங்குவோன் தானே உயர்ந்தவன். அதுபோல துறவு உயர்ந்ததா? துறக்காமல் இருப்பது உயர்ந்ததா? எனில் துறந்தவர்க்குத் தொண்டு செய்தற்காகவே ஏனையோர் துறக்காமல் இருக்கிறார் என்றால் துறவு பெரிதா? இல்லறம் பெரிதா? யார் பேசினும் திருவள்ளுவர் எதிரில் காட்சியளிக்கின்ற நிலையில் இருக்கிறார். ஆகவே, இரண்டையும் உயர்த்தித் தாழ்த்திமட்டும் சொல்லவில்லை. இல்லறத்தில் நின்று அறத்துடன் வாழ்தல் எளிது. ஆனால் துறவறத்தில் அப்படி வாழ்தல் மிகக் கடினம். இல்லற்த்தில் தவறிவிட்டாலும் மன்னித்து விடுவார்கள். ஆனால் துறவறத்தில் தவறிவிட்டால் மன்னிக்கமாட்டார்கள். துறவு

தி. II.14