பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5
திருக்குறள் பேசுகிறது


வழித்துணை

டலொடு உயிர் ஒன்றி உலவும் காலத்து ஒருங்கு நடைபயிலும் வழிகள் இரண்டு. இரண்டும் இயைந்த வண்ணம் நடை பயில்வதற்கு முன்பாக உயிர் தனது அகத்துறுப்பாகிய மனத்தினால் நடைபயிலும், அஃது ஒரு வழியே. இவ்வழியேதான் உடற் காரியங்கள் நிகழும். சிந்தை செல்லும் வழியே செயல். சிந்தைக்கு அடிச்சுவடு இல்லை; செயலுக்கு உண்டு. திருவள்ளுவர் தமது ஒப்பற்ற உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் முன் பாயிரம் ஓதுகிறார். பாயிரத்தில் மனிதரை வழிநடத்தி வாழ்விக்கும் தத்துவங்களை எடுத்துப் பேசுகிறார். கடவுளை உலகத்தின் முதலாக, திருக்குறள் கண்டு காட்டுகிறது. "ஆதிபகவன் முதற்றே உலகு" என்பது நினைந்து நினைந்து மகிழத்தக்கது. இறைவனை உலகம் முதலாகவுடையது. இறைவனே உலகத்தைத் தோற்றுவித்த முதல்வன்; இறைவனே எல்லார்க்கும் முன்னே தோன்றி மூத்த முதல்வன்; இறைவனே முதற்கருவாக நின்று அகத்தும் புறத்தும் விரிந்து கிடக்கின்ற இவ்வுலகத்தை விரிவடையச் செய்தனன். இங்ங்ணம் நினைந்து நினைந்து பொருள் கருதி