பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

219


பொறிகளாலாய பழக்க வழக்கங்களைச் சிலர் தூய்மை செய்வர். ஆயினும் புலன்களைப் பக்குவப்படுத்தார்.

சாந்தலிங்க அடிகள் பெருமான் 'வேரினை வெட்டாமல் காட்டினை அழிக்கமுடியாது. அதுபோல ஐம்புலப்பகையை வெல்லாமல் பொறிகளை வெல்ல முடியாது” என்பர். சங்க நூலும், "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று பேசும், பாசத்தினை வேரோடு பிடுங்க வேண்டும் என்பதனை, "பாசப் பழிமுதல் பறிப்பார்” என்று சேக்கிழார் கூறுவர். இந்த இயல்பு மனத்துய்மையினாலேயே முடியும். உடலியக்கத்துக்குக் குருதியும், உயிரியக்கத்திற்கு உணர்வும் அடிப்படை உடலும், உயிரும் ஒருங்கியைந்து செயற்படும் போது குருதியில் உணர்வு கலந்து செயற்படுகிறது. குருதிக்குத் தனியே இயல்பில்லை. குருதியோடு கலந்த உணர்வைப் பொருத்ததே இயல்பு. உணர்வுத் தோற்றத்தின் மையமாக இருக்கின்ற மனத்துய்மையே அறத்திற்கு அடிப்படை இதனைத் திருக்குறள்,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்று பேசுகிறது. மனத் துய்மையே அறம். இஃதின்றி இயற்றும் அறங்கள் அறமாகா. அஃது வாணிகமேயாகும். வாணிகத்திலும் ஊதியம் தரும் வாணிகமன்று; இழப்பினைத் தரும் வாணிகம் என்பர் ஆரவாரத் தன்மையுடையவரை அறநெறியில் வழி நடத்துகின்ற சான்றோர். வாய்ப்புக் கிடைத்துழியெல்லாம் முடிந்த வகையிலெல்லாம் ஓயாது அறத்தினைச் செய்யச் சொல்கிறது குறள். அறம் செய்தற்கு காலம், இடம், பொருள் ஆகிய சூழல்கள் அமையவேண்டு மென்று காத்திருக்கவேண்டியதில்லை. அப்படியென்று பருமனான ஒரு சூழலுமில்லை. பலகற்கள் அதனோடே பல சிறு கற்கள் ஆகிய எல்லாமே சேர்ந்து ஓர் ஒப்பற்ற