பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

227


மகிழ்வித்து மகிழ்வர். அருளாட்சிக்கு ஊனாட்சித் தன்மை குறைய வேண்டும்.

"பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீராகில், பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே” என்பது அப்பர்வாக்கு “ஊன் பொதி சுவர்” என்பது ஆன்றோர் வாக்கு. "ஊனினைப் பெருக்கி உள்ளொளி இழந்தேன்" என்பது ஆரூரர் வாக்கு. இதனால் ஊனுடலின் தன்மையை - பயனைக் குறைத்து மதிப்பிட்டதாகக் கருதக்கூடாது. ஊனுடல், உயிர் நலத்துக் கேற்றவாறு அமைய வேண்டும்.

உடல் பெருத்தால் உயிரின் ஆற்றல் முழுதும் ஊனுடலுக்கு இரை தேடுவதிலேயே கழியும். அதிலும் பயன்படும் ஊனுடல் பகுதிக்கு மட்டுமின்றி வெற்றுச் சதைகளுக்கு இரைதேடிப் போட்டு எய்த்துச் சாகவேண்டிய அவசியம் ஏற்படும். உயிர்க்குத் தேவையான ஊனுடல் போற்றுதற்கு எளிய சைவ உணவு போதுமானது.

எளிய சைவ உணவு - அதாவது காய்களும் கனிகளும் ஊனுடலை வளர்க்கப் பயன்படுவதோடன்றி நல்லுனர்விற்கும் துணை செய்கிறது. கதறக் கதறக் கழுத்தை அறுத்து இரத்தம் சொட்ட இரக்கமின்றிப் புலாலைச் சுவைத்து உண்பவன் எங்ஙனம் அருளாட்சியுடையவனாக இருக்க முடியும்? என்று வினவுகிறார் திருவள்ளுவர்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

என்பது திருவள்ளுவர் வினா.

மனிதன் சுவைத்துத் தின்ற ஊனை, அதற்காக ஊனுடலினின்றும் பிரித்த உயிரைத் திருப்பித்தர முடியாது. இங்ஙணம் திருப்பித் தரமுடியாத நிலையிலுள்ள ஆற்றல் அற்ற மனிதன் உயிர் பிரித்து ஊனைத் தின்பது பாவம். அவனை நரகம் ஏற்றுக் கொள்ளும் எப்படி அவன் தின்ற ஊனைத்