பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்குறள் குற்றத்தினை மட்டும் கூறுவதில்லை; கடிவதில்லை; குற்றத்தின் காரணத்தையும் கண்டு கடிகிறது. மனிதனின் தேவைகள் எப்பொழுதும் குறைவாகவே இருக்க வேண்டும். தேவைகளைப் பெருக்கிக்கொள்வதால், வாழ்க்கை ஆடம்பரமாவது மட்டுமல்லாமல், ஆசையையும் தூண்டும். ஆசை இல்லாத ஒன்றைப் பெறத் தூண்டும். அப்பொழுது உள்ளம் களவை நாடும். ஆதலால் களவினின்றும் விடுபட, தேவையைக் குறைக்கவேண்டும். தனது பொருளியல்புக்கேற்றவாறு அடக்கமாக, எளிமையாக வாழுதல் வேண்டும்.

"அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்”

என்பது குறள்.

களவு கருதிய இன்பத்தையும் தருவதில்லை. மாறாக, நீங்காத் துன்பத்தையே தருகிறது. அதுமட்டுமா? களவில் ஈடுபட்ட நெஞ்சத்தினர் நேரிய முயற்சிகளில் ஈடுபடுதலும் தடைப்படுகிறது. ஆதலால், களவினால் ஒரோவழி ஆக்கம் வந்தாலும், அஃது அளவிறந்து ஆவதுபோல் ஆகிப் பின் கெடும். ஆகிக்கெடுவதால், இன்ப நைப்பாசைகளைத் தோற்றுவித்து பின் அவற்றை நிறைவு செய்து கொள்ள முடியாத அவல நிலைமையையும், களவின் வழிவந்த துன்பங்களையும் ஒருசேர அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது.

ஒருவர்க்குக் கொஞ்சம் பொருள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். பொருள் எப்பொழுதும் தனித்து வராது. எனவே பொருளை நம்மிடத்துக்குக் கொண்டு வரும் இயல்புகள் என்னென்ன என்பதை ஆராயவேண்டும். பொருளைக் களவு, வஞ்சனை, சூது முதலிய இயல்புகள் கொண்டு வருவதும் உண்டு. இங்கனம் வந்துசேரும் பொருள்கள், செலவழிந்து விட்டால் பொருளுடன் வந்த இயல்புகள் போகா. அவற்றை அரிதில் முயன்றே நீக்கிக்