பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

247



நல்லாறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

என்றும், பல்லாற்றானும் கூறி, வலியுறுத்துகிறார். கொல்லா திருத்தலை மட்டும் திருவள்ளுவர் அறமாகக் கருதவில்லை. சமூக ரீதியாக-சமூகம் ஒருவரை உணவு முதலியன இல்லாமல் தாமே சாக விடுதலையும் கொலைக் குற்றமாகவே கருதுகிறார் என்பது வேறு எந்த நீதி நூலிலும் இல்லாத சிறப்பு.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்ற குறள் நினைந்து நினைந்து மகிழத்தக்கது. வளம் பல படைத்த உலகத்தில் கிடைக்கும் வளங்களைப் பகுத்துக் கொடுத்து, உண்டு, வாழ்வித்து, வாழ்தலே அறமாகும்; எல்லா நூல்களும் உணர்த்தும் அறமாகும். ஆதலால், களவு விடுத்து, வாய்மை ஏற்று, வெகுளி நீக்கி, இனியன செய்து, பகுத்துண்டு வாழ்தல் மனத் தூய்மையைப் பெறுதற்குரிய வழி. இங்ஙனம் குறள் கூறும் ஒழுக்க நெறிகள் நம்மிடை நிலவுமாயின் இன்பம் சூழும். இந்த அதிகாரங்கள் துறவற இயலில் இருந்தாலும் மனிதராகப் பிறந்த எல்லாருக்கும் உரியனவேயாம்.

பேரின்பம்

யிர்களுக்கு இன்ப வேட்கை இயற்கையிலும் இயற்கை உயிர்கள் இன்ப நலத்தில் நாட்டம் கொண்டே ஓயாது உழைக்கின்றன. சடப்பொருள்களாலாய உலகத்தின் நோக்கமும் உயிர்களுக்கு இன்பம் தருவதேயாம். இறைவன் ஐந்தொழில் நடத்துவதும், பெண்பால் உகந்தாடுவதும் உயிர்களுக்கு இன்பத்தைப் புணர்த்தும் நோக்கத்துடனேயாம்.