பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு மனிதனுடைய ஒழுக்கத்திற்கும், விருப்பத்திற்கும் காரணமாகக் குடி அமைந்து விளங்குகிறது. சொல்லும் செயலும் மாறுபடாத-செப்பமும், பழி பாவங்களுக்கு அஞ்சுதலும் இயல்பாகவே உயர்குடிப் பிறந்தார்களிடம் உண்டு. தாழ்வான குடியினருக்குக் கற்றுத் தந்தாலும் வருவதில்லை. இங்கு உயர்குடி என்பது பண்பில் உயர்ந்த குடியேயாம். பிறப்பாலும் செல்வத்தாலும் செயற்கையில் உயர்த்தப்பெற்ற குடியல்ல.

செப்பமும் நானும் உயர்குடியின்கண் இயல்பாகவே உண்டு என்பதற்கு, சிலம்பில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பான சான்று. சிலம்பில் வரும் நெடுஞ்செழியன் தன் குற்றம் மட்டும் உணராமல், தன்னுடைய தென்னவன் குடிக்கே இழுக்கு வந்துவிட்டதே என்று ஏங்குகிறான். உயர்குடிப் பிறந்தார் ஒருவர் அந்த உயர்குடிப் பிறப்பின் சிறப்பியல்புகளை மேலும் வளர்க்கவே முயற்சி செய்வர். ஒருகால் அது இயலாது போனால், குறைக்காமலாவது இருக்க முயல்வர். அதன் காரணமாக ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய ஒழுக்கங்களினின்றும் விலகார்; கீழிறங்கி வாரார்.

உயர்குடிப் பிறந்தார் இயல்பு என்ன? அவர் இனிய முகமுடையராக இருப்பர்; இனிய சொற்களையே பேசுவர்; யாரையும் இகழார் நிறைய அள்ளிக் கொடுப்பர் என்பதை,

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு

என்ற குறளால் அறிக. இதன்கண் "இகழாமை" என்ற ஒழுக்கமே உணரத்தக்கது. நகையும் இன்சொல்லும் இருந்தாலும் இகழ்தல் இருக்குமாயின் கேடு. இன்று பலர் ஈதல் புரிகின்றனர். ஆயினும் அவர்கள் பாமரர், ஏழை, புத்தியில்லாதவர் என்று இகழ்ச்சியாகக் கருதியும் கூறியும்