பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது குறள். இந்நிலவுலகம் நிலைபெற்றிருக்கிறது. கோடானுகோடி மக்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அங்ஙனம், சுமந்து நிற்பது சான்றோரின் இயல்புகளைக் கண்டு மகிழ்ந்தேயாகும். சான்றோர் சால்பிற் குன்றுவாராயின் நிலம் வறிதே மக்களைச் சுமக்காது.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை

என்பது குறள்.

வள்ளுவர் உலகம் பெருமையுடைய உலகம்; பெருமைப்படுத்தும் உலகம். வள்ளுவத்தின் பெருமை சால்பில் தங்கி இருக்கிறது. சால்பு தன்னைத்தான் கொண்டொழுகுவதில் அமைந்து கிடக்கிறது. அங்கேயே இன்ப உலகமும் இருக்கிறது.

பண்புடைமை

னி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் ஆழமான, அகலமான உறவை ஏற்படுத்தி, அந்த உறவை என்றும் அகலாமல் பேணிப் பாதுகாக்கும் ஒழுக்கம் பண்பாடு விளையும் நிலத்தினை விளைவதற்குரிய ஆற்றலைப் பெறுதற்குச் செய்யும் முயற்சியைப் பண்படுத்தல் என்று கூறுகிறோம். பண்படுத்தப்பெற்ற நிலம், உயர்நிலை பேணுதற்குரிய உணவினை வழங்குகிறது. அதுபோல, உயிர்க்குச் சிறந்த இன்ப நல்லுணர்வுகளைப் பண்படுத்தப்பெற்ற உள்ளம் வழங்குகின்றது. பெருமை, சான்றான்மை முதலிய சிறப்பியல்புகள் அமையப்பெற்றும் பலரோடு ஒத்து இயைந்து வாழ முடியாது போனால் பயனென்ன?

பலர் கூடி இணைந்து வாழ்வதற்கே வையகம். இந்த இணைந்த கூட்டு வாழ்க்கைக்குப் பல சமயங்களில் பெருமை-