பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உறுப்பொத்தல் மக்கள் ஒப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

என்று குறள் கூறுகிறது.

மனிதவாழ்க்கை மிகவும் அருமையானது. இதன் அருமையறிந்து பயன்படுத்துவோர் மிகச் சிலரேயாம். மனித உலகத்தை நடைமுறைப்படுத்தி நிலைபேறுடையதாகச் செய்யும் பேரியல்புகள் இரண்டு. ஒன்று நீதி, பிறிதொன்று அறம். நீதி உள்ளச் சார்புடையது; அறம் செயலின் பாற்பட்டது. இவ்விரண்டு இயல்புகளையும் வாழ்க்கையைப் பயனுடையதாக வாழ விரும்புவர்கள் அனைவரும் விரும்பி ஏற்றுப் போற்றுவர்.

இன்றைய உலகியலில் பலர் பயனடையவே விரும்புகிறார்கள். காதல், கணவன்- மனைவி வாழ்க்கை, நட்பு, உறவு முதலிய எல்லா இடங்களிலும் "உன்னால் எனக்கென்ன லாபம்?" என்ற கேள்வியே கேட்கப்படுகிறது. பயன்பட விரும்புவதில்லை. பயனடைதலைவிடப் பயன்படுதலே சிறப்புடைய வாழ்க்கை நீதியும் அறமும் உடையோர் மற்றவர்கள் பயன் கொள்ளத்தக்க வகையில் வாழ்வர். இதனைப் "பயனு டையார்” என்று குறள் கூறுகிறது. பயனுடையார் பிறருக்கும் பயன்பட வாழ்வர். அவ்வழி தமக்கும் பயன்படுவர். இதனை,

நயனொடு நன்றி. புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு

என்று குறள் பேசுகிறது.

பலர் பழகுவர்; சிரித்து மகிழ்ந்து பேசிப் பழகுவர். ஆனால் பலரிடத்தில் இச்சிரிப்புக்கூட உள்ளத்தின் பொழிவாகிய மகிழ்ச்சியிலிருந்து மலர்ந்த சிரிப்பாக இருப்பதில்லை; செயற்கையாக இருக்கும். சிரிப்பதற்காகச் சிரிப்பதில்லை. வெளிப்படையாக இகழ்ந்து கூற ஆற்றலின்மையின் காரணமாக சிரிப்பில் மறைமுகமாக இகழ்ந்து கூறுவர். குத்தலும்