பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்” என்று முன்னர்க் கூறியது குறள். அதுபோலவே நாணுடைமையும், உயிரினும் சிறந்தது என்று குறள் கூறுகிறது. இவ்விரண்டில் எது உயிரினும் மேலாயது? என்று திருவள்ளுவர் ஆராய்ந்து, ஒழுக்கத்திலும் நாணுடைமையே சிறந்தது என்று கூறுகின்றார். ஒழுக்கக்கேடு தவறுதான். ஆயினும் ஒரோவழி ஒழுக்கத்தில் தவறுகிறார்கள் மீண்டும் அந்த ஒழுக்கத்தில் முயன்றால், நிலைபெற முடியும்.

ஒழுக்கத்தில் எளியரானார் பலர் பின் ஒழுக்கத்தில் வளர்ந்து ஒழுக்கத்தில் உறுதிபெற்றுப் புகழ் பெற்றனர். திருநீலகண்ட நாயனாரும், அருணகிரிநாதரும் இதற்குச் சான்றாவர்.

நாணுடைமை தவறினால், மீண்டும் வளர்தல் அரிது. தீயனவற்றைக் கண்டு நாணும் இயல்பை நெஞ்சு மறந்துவிட்டால், நெஞ்சு கட்டுக்கோப்பும் காவலுமில்லாத திறந்த வீடாகிவிடுகிறது. அங்குப் பழியும் பாவமும் தன்னிச்சையாகப் புகுந்து ஆட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. ஆதலால், நானும் இயல்பே நல்வாழ்க்கையின் வாயிற் கதவு. அந்தக் கதவு தீயனவற்றைக் காணும்பொழுது மூடா தொழியின், தியனவற்றிற்கு ஆட்படும் ஆதலால், ஒழுக்கம் இழப்பினும் அவனுடைய குடிப்பிறப்பு ஒன்றினையே கெடுக்கும். நாணுடைமை இல்லையாயின் நலமனைத்தும் கெடும். இதனை,

குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை

என்று கூறுகிறது குறள்,

சிலர், "கொள்கையே பெரிது, அக் கொள்கையை எப்படியும் எந்த வகையாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்”