பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

319


தடவையாவது உழ வேண்டும். ஓர் உழவுக்கும் பிறிதோர் உழவுக்குமிடையில் நனைதலும், உழுதலும், காய்தலும் நிலத்திற்கு நல்லது. உழுத புழுதி காயவேண்டும்.

நிலத்தில் ஈரமும், காற்றும் கலந்திருப்பதன் காரணமாக 'மாய்ச்சர்' என்ற பொருள், கதிரவன் ஒளியால் காய்தலின் மூலம் எடை குறையும். அங்ஙனம், ஒரு பலம் புழுதி, கால் பலம் புழுதியாகக் குறைகிற அளவு காய வேண்டும் என்று கூறுகிறார். இங்ங்ணம் உழுது புழுதியெடுத்து அந்தப் புழுதியைக் காயப் போட்டு வேளாண்மை செய்தால், பிடி எருவும் போடாமல் நன்றாக வினைவிக்கலாம். பனைத்து வளர்ந்து அதிகப் பயனைத் தரும். இதனை,

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

என்று குறள் கூறுகிறது.

திருவள்ளுவர் நல்ல உளவியல் வல்லுநர். நம்முடைய உளத்தின் இயல்பு, ஒருசேரப் பல கடமைகளை எடுத்துக் கூறினால் கடமைகளின் சுமை கருதிச் செயற்படத் தயங்கும். அதற்கு மாறாக ஒன்றன்பின் ஒன்றாக முன் சொன்ன கடமையில் உளம் சென்று பற்றிச் செயற்பட்டு நிற்கும் பொழுது, ஊக்கமும் மகிழ்ச்சியும் உளத்திடை இருக்குமாதலால், பிறிதொரு கடமையை எடுத்துக் கூறினால் எளிதில் ஏற்றுச் செய்யும் இயல்பு உள்ளத்தின் பாங்காகும். அங்ஙனம் கூறும்பொழுது, உணர்த்தும் ஒவ்வொரு கடமையினையும் உயர்த்திக் கூறுதல் உள்ளத்தின்கண் ஊக்கக் கிளர்ச்சியும் எழுச்சியும் தோன்றவேயாகும். முன் ஒன்றினைப் பெரிதுபடுத்தி, பின்னை அதனினும் இது நன்றென்று கூறுதல் மேன்மேலும் உயிரினை-உள்ளத்தினை உந்திச் செலுத்தும். இந்த வகையில் உழவுத்தொழிலின் நுட்பத்தினை,