பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/335

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

331



இழிசெயல்கள்

ழைத்து உறுபொருள் ஈட்டி மகிழ்ந்து வாழ்தலே இயற்கை ஒரோவழி தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் பிறரிடம் இரந்தும் வாழ வேண்டிய அவசியம் ஏற்படலாம். இயற்கையின் கொடுமைகளாலோ அல்லது சமுதாயக் கேடுகளாலோ இரந்து வாழும் அவசியம் ஏற்படலாம். அல்லது வாழ்ந்து முடிப்பதற்கு இரந்து கேட்காமல் வாழ்க்கையைத் தொடங்குதற்குரிய மூல முதற்பொருளை இரந்து கேட்கலாம். இரக்கின்றவன் சூழ்நிலை, இரக்கப்படு வோன் பண்பு ஆகியன கருதி இரத்தல், ஈதல் ஆதலும் உண்டு. இந்த மாதிரி இடத்தில் வெட்கப்படாமல், கூச்சப்படாமல், அவசியம் ஏற்பட்டால் இரந்திடுக என்கிறார் வள்ளுவர்.

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று

என்பது குறள். இரந்து கேட்டவன் நிலையினைக் கருதி பொருளைப் போற்றுதலினும், அவனைப் போற்றுதல் உயரிய அறம் என்று கருதும் இயல்பில்லாதவர்கள் இல்லையென்று உள்ளதையும் கரந்து கூறிடுவர். கரவாது ஈயும் இயல்புடையோர் அருமை என்பதால் காணின் என்றார். தானே வறியனாகாமல் வறியனாக்கப்பட்ட ஒருவன் பொருள் பெற்ற ஒருவனிடத்தில் இரந்து கேட்கும் பொழுது, அவன் கொடுக்காமல் உள்ளதையும் இல்லையென்று மறைப் பானானால் அதனால் வரும் பழி இரப்பவனுக்கில்லை; இரக்கப்படுவோனுக்கேயாம். இதனை, அப்பரடிகள் 'கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்' என்றார்.

இரந்த பொருள்கள் யாதொரு துன்பமும் கொடாமல் கிடைக்குமாயின், ஒருவருக்கு இரத்தலும் இன்பம் என்பது