பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/336

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வள்ளுவத்தின் கருத்து. கரந்து வாழாதார் மாட்டு இரந்து வாழ்தலும் ஓர் அழகேயாம்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோர் ஏஎர் உடைத்து

என்பது குறள்.

"முன் நின்று இரப்பும் ஓர் ஏர் உடைத்து" என்றார். முன் நின்ற அளவிலேயே வாய் திறந்து இரந்து கேட்கும் இழிவு வாரா முன்னமே, குறிப்புணர்ந்து கொடுத்தலின் 'இரத்தலும் அழகு' என்றார்.

உள்ளத்தைக் கரந்து வாழும் இயல்பினைக் கனவிலும் கருதார்மாட்டு இரத்தலும் ஈதலே போலும், இரப்பவரைக் கண்டால், உள்ளோர் பலர் எள்ளி நகைப்பர்; இகழ்ந்து பேசுவர். சிறப்புடை மரபில் வந்தோர் இரப்போரைக் கண்டால் ஏற்றுப் போற்றி முகமன் கூறுவர்; இன்ப உரைகள் கூறித் தேற்றிடுவர் ஏழ்மையில் நைந்த உள்ளத்தைத் தமது தூய அன்பினால் ஒற்றடம் கொடுத்து உருத்தேற்றுவர்.

புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களின் பணிமொழி பயிற்றி

என்று அகம் பேசுகிறது. இங்ஙனம் மதித்து வழங்கும் மனப்பாங்கு உடையவர்களை இரப்போர் காண்பாராயின் மகிழ்வர். உள்ளத்தில் தங்கிய உவகையில் களிப்பர். பொருட்செல்வம் மட்டுமின்றி ஆரா இன்பத்தினையே அனுபவித்தலால் 'உள்ளுள் உவப்பதுடைத்து' என்றார்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து

என்பது குறள்.

மானிட சாதியின் இம்மைக் குறிக்கோள் புகழுடையராக வாழ்தலேயாம். புகழ் பலவாறாகப் பலவகைகளில்