பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருப்பித் தாக்கும். அந்தத் தாக்குதலை உன்னால் தாங்க முடியாது என்பது குறிப்பு. மேலும் செல்வம் சுழன்று வருவதொன்றேயாம். நேற்று செல்வம் உடையவனாக இருந்த ஒருவன் இன்றைக்கு இரப்பவனாகின்றான். செல்வமுடை யவனாக இருந்த ஒருவன், அந்தச் செல்வத்தைப் பெற்றிருந்த பொழுது கொடுத்தும் மகிழ்ந்தும் வாழ்ந்து இருப்பானாகில், அவன் செல்வத்தை இழந்தாலும் அவன் நலன்கருதி முன்பு பயனடைந்தோர் பாராட்டிப் பாதுகாப்பார்கள். அப்படி யின்றிச் செல்வத்தை வைத்து இழந்திருப்பானாகில் அவனைத் தேடுவாரில்லை. இத்தகையவனுடைய வறுமையும் இரவும் பயன் தராது. இதனைச் செல்வமுடையோன் அறிந்து உணர்ந்து அவனாகத் தராதபொழுது, அவனைச் சினந்ததால்தான் என்ன பயன்? தானே உணரும் சக்தியில்லாதவனிடத்தில் சினப்பதனால் பயனில்லை. ஆதலால் இரத்தலையும் கூடப் பற்றற்றே செய்யவேண்டும் என்பது வள்ளுவர் குறிப்பு. இதனை,

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி

ன்றோதுகின்றார் திருவள்ளுவர்.

விதி வகுத்து இரக்கச் சொன்னாலும் திருவள்ளவருக்கு இறுதி இலட்சியம் இரந்து வாழ்கின்ற மக்களில்லாத-எல்லாரும் எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்கின்ற ஒப்பற்ற சமநிலைச் சமுதாயம் காண்பதேயாகும். கடைசி மனிதன் இரவாமல் வாழுதற்குரிய பெருஞ்செல்வம் பெறுகிற வரையில் மேலேயிருப்பவர்கள் கொடுத்து அழைத்துவரக் கடமைப்பட்டிருப்பதால் அந்தக் கட்டமையை நிறைவேற்றுகிற காலக்கட்டம் வரையிலேயே இரப்பையும் உட்படுத்திப் பேசினார்.

தன் மதிப்பையும் இன்பத்தையும் ஒருசேர இழக்க வைக்கும் இரத்தல் அஞ்சுதற்குரியது. இரந்து இனிய