பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

335


சுவையொடு கூடிய உணவை உண்ணல் சிறப்பன்று. மாறாக நெறியுடன் கூடிய முயற்சியின் பயனாகக் கிடைத்த, மோரொடும் கலக்கப்பெறாத சுவையில்லாத நீரிலேயே கலக்கப்பெற்ற கூழாயினும் உண்ணற்கு இனிது உடலுக்கும் இனிது புகழுக்கும் அரண் செய்யும். இதனை,

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணவின் ஊங்கினிய தில்

என்றார் திருவள்ளுவர்.

முயற்சியால் பொருளீட்டி வாழும் வாழ்க்கை பாக்கிய வாழ்க்கை அப்படியின்றி இரந்து வாழ்தல் இழிவான வாழ்க்கையேயாம். கரவாது மகிழ்சியுடன் கொடுப்போரிடத்தில் இரந்தாலும் தன் மதிப்பு அழிவதில்லையே தவிர உயர்வதில்லை. ஆதலால் யார் மாட்டும் இரவாதிருத்தலே, இரந்து கோடி செல்வம் பெறுதலினும் கோடி நன்றாம்.

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்

என்பது குறள்.

வறுமையென்னும் கடலை, வலிய முயற்சியினாலேயே கடக்கலாம். மாறாகப் பாதுகாப்பும் உத்தரவாதமுமில்லாத இரவு என்ற தோணியைக் கொண்டு கடக்கக் கருதினால் கரையேற முடியாது. மாறாகக் கரவு வன்பாறை தாக்கினால் வலிமையற்ற இரவுத் தோணி உடைந்து போகும். திருவள்ளுவர் நம்மையெல்லாம் இரந்து கேட்கிறார்; கெஞ்சிக் கேட்கிறார்.

அவருக்காக யாதொன்றும் கேட்கவில்லை; நமக்காகக் கேட்கிறார்! என்ன அவர் இரந்து கேட்பது? அதுவும் யாரை இரந்து கேட்கிறார்? இருப்பவரிடமா இரந்து கேட்கிறார்? இல்லை; இரப்பவரிடம் இரந்து கேட்கிறார்! அப்படியென்ன