பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/342

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கேட்கப்படுவதோ தண்ணீர். காசுஇன்றி எளிமையில் கிடைக்கக்கூடியது. ஆயினும் தண்ணிர் இரந்து கேட்ட அளவில் நாவிற்கு இழிவு வந்தே சேரும். அதற்குமாறாகக் கிணற்றினைத் தேடித் தண்ணிர் இறைத்துக் கொண்டுவந்து பசுவக்குத் தருவதே அறம், அதோடு புகழுமாம். இதனை,

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

என்று கூறுகிறார். நுகர்தற்குரியன பெறாதபொழுதும், இரவாமலிருத்தல் இந்த உலக முழுவதும் அடங்கிய பெருமையுடையதாகும்.

திருவள்ளுவருக்கு இரந்து வாழும் உயிர் வாழ்க் கையைக் கண்டால் கடும் சினம் உண்டாகிறது. குமுறிய உள்ளத்தோடு புரட்சிக்குரல் கொடுக்கிறார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

என்று பேசுகின்றார்."இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்" என்ற உண்மையினால், கடவுள் மனித உலகத்துக்கு இரத்தலை ஒரு தொழிலாக அமைக்கவில்லை என்பது பெறப்படுகிறது. ஒரு நியதி கடவுள் நியதி. பிறிதொரு நியதி கடவுள் நியதியினைச் சார்ந்த, ஆனால் இந்த உலகிடை நிலவும் அரசியல் நியதி. கடவுள் நியதியும், அரசியல் நியதியும் இலட்சியத்தால் ஒன்றேயாம். ஆயினும் முறைகளால் மாறுபடுகிறது. அரசியல் நியதியை அருட்சார்பின்றி, ஆணவச் சார்புடையோர் இயற்றி இயக்குவாராயின் ஆங்குச் சமநிலை கெடும். தன்னலச் சார்புடையோர் அந்த முத்திரையுடன் சுரண்டுவர்; பொருள் குவிப்பர் செல்வராவர். அம்முத்திரை கிடைக்கப் பெறாதார் ஏழை களாகி இரக்கும் நிலையினை எய்துவர். இந்த நிலையில் இரக்கும் நிலையடைந்தோர்