பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

71


அதற்குக் குறைவாக ஈட்டுதலும் பொருள் இழப்பிற்குரிய வழியேயாகும். பொருள் இழப்பு மட்டுமல்ல-அதைத் தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பல உண்டு. பொருள் இழப்பினைத் தொடர்ந்து சிறப்பிழத்தல், வறுமை, நோய், வாழ்க்கைச்சுமை ஆகியவையும் அவற்றினைத் தொடர்ந்து நரகமும் வரும்.

“பொருளாட்சி போற்றாதார்க் கில்லை” என்பதைத் திருவள்ளுவர் “புலால் மறுத்தல்” என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். இது, பொருளாட்சியின் அவசியத்தை எளிதில் மனங்கொள்ள உணர்த்துவதற்கே யாகும்.

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

வள்ளுவம் பிறந்ததேன்?

மிழினம் நிலவுலகத்தை முடியிருந்த நீர்ப்பரப்பு மறைந்து, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த இனம். வீரத்தில் மட்டுமல்ல; சிந்தனைத் திறத்திலும், சிந்தனையைச் செப்பும் மொழித் திறத்திலும், இலக்கியப் படைப்பாற்றலிலும், இலக்கியத்தின் பயனாகிய நனிநாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம் தமிழினம்.

இதற்குச் செல்வச் செழிப்பும் இருந்தது. அதனால், காலப்போக்கில் மதோன்மத்தமான வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிட்டது. அதனால் தமிழினத்தில் கள்ளும்