பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



131



பலர் படிக்கிறார்கள்-சிந்திக்கிறார்கள். ஆனாலும் சிந்தனை முழுவதுமே துாய்மையானது என்று கருதிவிடுவதற்கில்லை. ஏனெனில் பலரின் சிந்தனைக்கும்-புறச் சூழலுக்கும் தொடர்பிருக்கிறது. சிலருடைய சிந்தனை முதலில் அவர்களுடைய தவறான பழக்க வழக்கங்களில்தான் சென்று படரும். அந்தத் தவறான பழக்க வழக்கங்களை நியாயப் படுத்திக் காட்டவும் அவர்களின் அறிவு முயற்சிக்கும். அதனால்தான், 'உன்னுடைய மனச்சாட்சி மட்டும்-உன்னுடைய சிந்தனை மட்டும் பெரிதல்ல-சமுதாயத்தின் மனச்சாட்சியோடு உன்னுடைய மனச்சாட்சியையும் ஒத்துப் பார்’-என்றான், மாவீரன், மாஜினி. பல தவறுகளுக்கு -பல அநியாயங்களுக்குக் கூட ‘நான் என் மனச்சாட்சியறியப் பொய் சொல்லவில்லை’ என்று சொல்லத் தோன்றும். 'அவனுடைய மனச்சாட்சிப்படி’ தவறில்லைதான். அவன் மனச்சாட்சி அவன் பார்த்த பார்வையிலேதான் சென்று கொண்டிருக்கிறது. பாரமேற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் எருதுகள் நள்ளிரவில் தூங்கிக்கொண்டே நடந்து செல்லும். அது, அதற்குப் பழக்கத்தால் ஏற்பட்ட பயிற்சி. அதுபோலவே மனிதனும் பழக்கத்தின் அடிச்சுவட்டில் செல்லுவதில் எளிதாய் பயிற்சி பெற்றவன். 'படித்தவர்கள்’ எனப்படுவோர் பலர், ‘பழக்கம்’ என்ற உழுசாலில் செல்லுவதற்கே முயல்கிறார்கள்; தங்களை மாற்றிக்கொள்ள - புதுமைப்படுத்திக்கொள்ள வெட்கப்படுகிறார்கள் - கூச்சப்படுகிறார்கள்-பயப்படுகிறார்கள். தவறு என்று தெரிந்தும்கூட அதைவிட்டு விலகுவதற்கு அஞ்சுகிறார்கள். இந்த நூற்றாண்டில்கூட, உலகின் சமாதானத்திற்கு எந்தயுகம் அணுகுண்டைத் தோற்றுவித்ததோ-அந்த யுகம், அதைத் தடுக்கின்ற வலிமையான கரங்களையும் தோற்றுவித்தது. ஆனால் அப்பாவி உலகம் மீண்டும் அணுகுண்டைத் தடுத்து நிறுத்துகிறவனின் கரத்தை, வெட்டி வீழ்த்தி விட்டது! குண்டை வைத்திருக்கும் கரத்தை என்ன பண்ணப்