பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



135



அடுத்து, திருவள்ளுவர் காலத்திற்கு முந்திய தமிழகம், ‘வள்ளல்’களைப் போற்றிப் பாராட்டிய பாரம்பரியம் உடையதாக இருந்தது. முல்லைக்குத் தேர்கொடுத்தான்-மயிலுக்குப் போர்வை கொடுத்தான்-பொன்னும் மணியும் இன்னபிறவும் வாரிக் கொடுத்தான்-பொற்பூ சூட்டினான் என்றெல்லாம் பலவாறாக ‘வள்ளல்’களைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்த ‘வள்ளல்’ பரம்பரையைப் பாராட்ட திருவள்ளுவருக்கு மனம் வரவில்லை. நாம் எந்தப் புறநானூற்றுக் காலத்தில் வள்ளல்களைப் பார்க்கிறோமோ, அந்தப் புறநானூற்றுக் காலத்திலேயே வெம்பசியால் வாடியவர்கள் வயிற்றுச் சோற்றுக்காகப் ‘பசிப்பிணி மருத்துவன்’ இல்லத்தை நோக்கி எறும்புகளைப்போலச் சாரை சாரையாகச் சென்று கையேந்திய கழிவிரக்க நிலை இருந்ததென்பதையும் பார்க்கிறோம். அப்படியானால், எங்கிருந்து வள்ளல் தன்மை தோன்றுகிறது? பொதுவாக ஒருவர் வாரிக்கொடுக்க வேண்டும் என்றால் அவரிடத்து எஞ்சிய பொருள் நிறைய இருக்கவேண்டும். அவனிடம் அந்தப் பொருள் எப்படி வந்தது? எவ்வாறு குவிந்தது? என்று திருவள்ளுவர் கேட்டாரோ இல்லையோ அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ‘எஞ்சிய செல்வத்தை இன்னொரு வருக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன பெருமை இருக்கிறது?’ என்று கேட்கிறார். உன்னிடம் செல்வம் எஞ்சிக் கிடக்கிறது. எஞ்சியதை இன்னொருவருக்கு - தேவைப் படுகிறவருக்குக் கொடுப்பதுதானே கடமை? அதுதானே தொண்டு? இதில் உனக்கென்ன சிறப்பான வரவேற்புப் பத்திரம் வேண்டியிருக்கிறது?-இப்படித்தான் திருவள்ளுவரின் கருத்துச் செல்லுகிறது. இதனை ‘ஒப்பரவு’ என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்கள் இல்லாதவர்கள் இதனை ‘ஒப்பரவு' என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்களிடமிருந்து இல்லாதவர்கள் அதனைப் பெறுவது