பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



145


வேகத்தைத் தடுத்து எதிர் திசையிலேயே செல்ல முடியாதா? ஆற்றின் வேகம் அதிகம் என்றால், அதிலே எதிர்த்துப் போகிறவனின் சக்தி பெரிதில்லையா?

பொதுவாக, மண்ணிலிருந்து விண்ணோக்கிச் செல்லுகிற பொருளெல்லாம் மீண்டும் மண்ணுக்கே இழுத்தெறியப் படும் என்பது ஈர்ப்பாற்றல் விதி ‘ஆகர்ஷண தத்துவம்’ ஆனாலும், மண்ணின் ஈர்ப்பாற்றலைத் தடுத்து நிறுத்தி, மனிதன் விண்ணில் மிதக்கிக் கற்றுக் கொள்ள வில்லையா? வானில் பறக்கவில்லையா? ‘ஈர்ப்பாற்றல்’ ஓர் ஒழுங்குதான்- சக்திதான். ஆனாலும், மனிதன் தன் சக்தி கொண்டு அதனை வெற்றி கண்டு விடுகிறானே! அதுபோல, ஊழ், மனிதனின் நெடுநாளையத் தவறான பழக்கவழக்கங்கள் அவனைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்ல முயலும். மனிதனுடைய சிந்தனை-செயற்பாடு முயற்சி ஆகியன ஒழுங்காக இருக்குமானால் நேற்றைப் பழக்க வழக்கங்களை இன்று மாற்றிக் கொண்டு விடுவான். ஊழ் என்பதென்ன? நேற்றைக்கு முந்தின செயலின் விளைவு நெடுநாளைக்கு முந்தின காரியத்தின் விளைவு, சிந்தனைத் திறனும் செயலாற்றலும் இருக்கும்ானால், அவ்வினையின் விளைவை-புதிய சிந்தனை-செயல்களின் மூலம் மாற்றிக் கொள்ளமுடியும். ஊழினால் வருகிற உணர்வை-ஊழினால் வருகிற பழக்கத்தை மனிதன் மாற்றிக் கொள்ள முடியும். எனவே, ஊழை எண்ணிக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டிருந்து அழிந்து போகாதே என்று திருவள்ளுவர் பேசுகிறார்.

ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

என்னும் ஒரு குறட்பா ஊழ் என்ற அதிகாரத்தில் வருகிறது. இதில் வருகிற ‘முந்துறும்’ என்ற சொல்லை ஆராய்ந்தால் அதில் ஒர் உறுதிப்பாடு-திண்மை ஒலிக்கவில்லை. ‘முன்வந்து நிற்கும்’ என்று தான் கூறுகிறார். ஆனால் முயற்சியைப் பற்றிச்

தி.11.