பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



161


திருவள்ளுவர் மக்கட் சமுதாயத்தை உள்ளது உள்ளபடி பார்த்தார். மனிதனைப் பார்த்து, உறுப்பாலே மனிதனாகி விடுவதில்லை... உயர்ந்த பண்பாலே மனிதனாக வேண்டும்; உடலாலே மனிதனாகிவிடுவதில்லை - உள்ளத்தால் மனிதனாகவேண்டும்’ என்கிறார்.

பொதுவாக ஆடுகளையும் மாடுகளையும் தொழுக்களில் கட்டி வைப்பார்கள்; மனிதர்களை அப்படிக் கட்டி வைப்பதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். பகுத்தறிவு, மனச்சாட்சி இவற்றை வைத்துத் தம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும். அறிவில்லாத விலங்குகள்கூட வேலிக்கும் சுவருக்கும் விலகி ஒதுங்கிப் போகின்றன. மனிதனோ அவற்றை உதைத்துத் தள்ளிவிட்டுப் போகிறான்.

வானம், காற்று இவைபோல, அறிவும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும். அந்த அறிவைத்தான் சமய உலகில் ஞானம் என்கிறோம்; வள்ளுவர் ‘வாலறிவன்’ என்கிறார். இந்த உலகை-உலகமக்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் தூய அறிவையே வள்ளுவர் போற்றுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு-பலருக்குக் கல்வி பெற வாய்ப்பும் வசதியும் இல்லாமலிருந்த அந்தக் காலத்தில் கல்வியுரிமை மறுக்கப்பெற்ற காலத்தில் - படித்தறிய வாய்ப்பும் வசதியும் இல்லாமற் போனாலும் படித்தவரிடம் சென்று கேட்டறிந்து அறிவை வளர்த்துக்கொள் என்று வலியுறுத்தினார். ஒரு பெரும் கல்விப் புரட்சியையே உண்டாக்கினார். எல்லாருக்கும் கல்வி கொடுப்பது சமுதாயத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். 'அறிவினால் ஆராய்ந்து பார்’ என்ற பெரும் புரட்சியைச் செய்தவர்களில் தலையாயவர் திருவள்ளுவர்.

பெளத்த ஆரிய எதிர்ப்புக்களையெல்லாம் மோதிச் சமாளித்துத் தமிழ் நாகரிகத்தையும் தமிழர் பண்பையும்

தி.12.