பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


4. திருக்குறளும் காந்தியடிகளும்

சராசரி வாழ்க்கையைக் கடந்தவர்களின் வாழ்க்கையோடு திருக்குறள் கருத்துக்கள் பொருந்துவது இயல்பு. மனிதனால் செய்யக்கூடிய காரியங்களைப் பற்றித்தான் திருக்குறள் பேசும். எனவே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையோடு திருக்குறள் பொருந்தி வருவது சாலப் பொருத்தமானதாகும்.

திருக்குறள் "கடவுள் போல", நாடு இன மொழி வேறுபாடுகளைக் கடந்து விளங்கும் நூல். நாத்திகர்களும் கூடத் திருக்குறளைத் தங்கள் நூல் என்று போற்றுகிறார்கள். காந்தியடிகள் எவரின் ஆதிக்கத்தை எதிர்த்தாரோ, அந்த ஆதிக்கத்தினரும் அவரை மதித்துப் போற்றினார்கள்.

திருக்குறட் கடவுள் வாழ்த்தினை வள்ளுவர்தான் செய்தாரோ? அவர் கடவுள் வாழ்த்துச் செய்திருப்பாரா? என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நிச்சயமாகத் திருக்குறட் கடவுள் வாழ்த்து திருவள்ளுவர் செய்ததுதான்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து, அறிவுக்கும் அனுபவத்திற்கும் மிக ஒத்தது. திருவள்ளுவர் புனைந்துரையாக எழுதவில்லை.

கடவுளை நம்பிச் சிந்தித்து வாழ்த்த, நாம் என்ற உயிர் ஒன்று உண்டு என்று உணர வேண்டும். ‘உயிர்’ இல்லை என்பார் சிலர்; உயிரும் கடவுளும் ஒன்று என்பார் சிலர். 'உயிர் தனியானது’ என்பதை ‘நீடுவாழ்வார்’ என்ற சொற்றொடர் மூலம் ஒத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். உயிரின் இயல்புகளைப் பற்றி வள்ளுவர் அழகாகப் பேசுகின்றார். ‘மன்னுயிர்’ என்கிறார். ‘மன்’ என்றால் நிலைபெற்றது என்பது பொருள். இப்படி அவர் கூறியதன் மூலம், ‘உயிர் என்றும் உள்ளது; அது என்றைக்கும் வாழும்; அது தோன்றியது மில்லை அழிவதுமில்லை’ என்ற