பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


அடிகளாரின் கருத்து நயத்திற்கும் சிந்தனைச் சிறப்புக்கும் பெருமிதப் பெருமைக்கும் எடுத்துக்காட்டுக்கள் ஒரு சிலவற்றை இங்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போற்றிப் பாராட்டும் அதே குரலில், அம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் இவர் ‘எதிர்வைக்கும் கருத்துரைகள் ஆலோசனைகள்’ இதிலுள. பின்பாட்டுப் பாடுவது பெருமிதமன்று. அடிகளார் அரசியலில் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ அதிகாரத்திற்குப் பல ‘பரிமாணங்களில்’ ஒர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

அவர் வழிவரும் இன்றைய குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாரும் அதே நெறி முறைகளைப் பின்பற்றி வருவது தமிழர்கள் செய்த தவப்பேறேயாகும். தமிழர்கள், அவர்கள் ‘நாத்திகர்களே’ யாயினும், தங்கள் திருமடங்களைப் போற்ற வேண்டும்; வாழ்த்த வேண்டும்; பாராட்ட வேண்டும்.

பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள், தமிழுணர்வு, தமிழினவுணர்வு, தமிழ்ப் பண்பாட்டுணர்வு உடையவர்களை இனங்கண்டு போற்றி, கைம்மாறு கருதாமலும் செலவு பாராமலும் ‘தமிழர்கள் பனங்கொடுத்து நூல் வாங்கும் பழக்கமற்றவர்களாயிற்றே’ என்று தயங்காமலும் அத்தகையவர்களது நூல்களை வெளியிடுகிறார். பதிப்புலகில் ‘மெய்யப்பன் தமிழாய்வகம்’ அமைத்து ஒரு புரட்சியே செய்து வருகிறார்.

‘மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம் செய்தலன்று; வாழ்தல்’ என்கிறார் அடிகளார் (பக். 23). நாமோ அறம் பேசவும் விளக்கவும் என்றுதான் இன்று நடந்து கொள்கிறோம். துறவியாகிய இவர், ‘இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம்’ என்ற வள்ளுவர் கருத்தை மனம் ஒப்பி ஏற்குமிடங்கள் பலவாகும். ‘தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும்