பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



171


வேண்டும்; அதன் மூலம் மனவெப்பம் கழிய வேண்டும். இந்த மனோதத்துவ அடிப்படையில்தான் நான் தாய்மொழியில் வழிபாடு செய்யவேண்டும் என்று கூறினேன். நமது குறைகளைச் சொல்லி அழுது, மனம் திருந்த நமக்குக் கிடைத்திருக்கிற ஒரே இடம் கோயில்தானே! மனிதன் கைகால்களால்-வாயால் தூய்மையாக இருந்துவிட முடியும். அது எளிது; மனத்தால் தூய்மையாக இருப்பதுதான் அரிது. மனிதன், மனத்தை அடக்கியாளக் கற்றுக்கொண்டால் - அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் அவன் உயர்நிலை எய்துகிறான். எனவேதான் திருவள்ளுவர் மனப்புரட்சி செய்தார்.

அன்று, பாண்டிய மன்னன் ஒருவனின் உயிர்நிலை அரச நீதியில் தங்கியிருந்தது. பாண்டியன் மாண்டான்-அவன் பத்தினியும் மடிந்தாள். அவள் உயிர்நிலை கற்பிலே தங்கி இருந்தது.

இன்று பலர் உயிர்நிலை பணத்திலேதான் தங்கியிருக்கிறது. உயிர்நிலையை அன்பில் வைத்திரு என்கிறார். அது மட்டுமா? அன்பைப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறுகிறார். இன்னொருவர்க்கு உற்ற துன்பத்தைக்கண்டு, இரங்கி வருந்தி அழும்போது சிந்துகின்ற கண்ணீர் அன்பைக் காட்டிவிடும் என்கிறார்.

மூச்சுக் காற்றும், சோறும், தண்ணீரும்போல இந்த நாட்டு மக்களுக்கு வள்ளுவம் இன்றியமையாததாகும். அது நாம் நாள்தோறும் உண்ண வேண்டிய கருத்துணவு. அதை உண்டால் மட்டும் போதாது; சீரணித்துக் கொள்ள வேண்டும்.

கவிதையைப் பாராட்டுவதின் மூலம் அதைப் பாடிய கவிஞனைத் திருப்திப்படுத்துவதுபோல, ஓவியனைத் திருப்திப்படுத்த முடியும் என்பதே எனது இலட்சியம். இதுதான் அருள் நெறிக் கொள்கை. வள்ளுவத்தின் வழி