பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



175


போக்கு நசித்திருக்கிறது. ஆணவமும், ஆதிக்க சக்தியும் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்றன. மனிதன் இவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? மற்றவர்களையும் மகிழவைக்க வேண்டாமா? மானிடச் சந்தையின் தரம் உயர வேண்டுமானால், சிந்தனையால்-செயலால் இன்ன பிறவற்றால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்; கருத்து வேற்றுமைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் வேற்றுமைகளை உள்ளடக்கி விழுமிய ஒருமைப்பாட்டைக் காண வேண்டும். கருத்து வேற்றுமைகளால் புதிய காட்சிகளைத் தோற்றுவிக்கக் கூடாது. எறும்பு, தேனீ, கறையான் இவற்றைப் போல ஒருமைப்பாட்டோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புரவுக் கொள்கை மானிடச் சந்தைக்கு மிகமிக இன்றியமையாததாகும். மானிடச் சந்தையில் மனிதர்கள் ஒருவரோடொருவர் மனங்கலந்து பழக வேண்டும். புதிய கருத்துக்களையும் புதிய சித்தாந்தங்களையும் கண்டு, அவற்றைச் செழிப்புடையனவாக வளர்க்க வேண்டும். மானிடச் சந்தையைக் கருத்துப் புரட்சியுடையதாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் போட்டி இன்றியமையாததுதான். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத் தவறு செய்யக்கூடாது. திறந்த வெளியில் திறந்த மனத்தோடு வாழ்ந்து வெற்றிபெற வேண்டும். மானிடச் சந்தையைத் தரம் உடையதாக-தகுதி உடையதாக-நாணயம் உடையதாக ஆக்குங்கள். அன்பும் அறமும் மானிடச் சந்தையில் இடம் பெறுமாறு செய்யுங்கள்!

7. மரபா? சீர்திருத்தமா?

மரபை வலியுறுத்த வந்தவர்கள் மரபு என்பதற்கு என்ன வரையறை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அவர்களே குறிப்பிடவில்லை. எது மரபு? பொதுவாக நேற்றையச் சீர்திருத்த்ம் இன்று மரபாகி விடுகிறது. இன்றையச்