பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



179


வள்ளுவர் வாய்மையின்பாற் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார். எனவே, அவர் தீமை விளைவிக்காத சொல்தான் "வாய்மை" என்கிறார். இது சீர்திருத்தமா இல்லையா?

ஈதல், விருந்தோம்பல் முதலிய அடிப்படைப் பண்புகளை மரபை வள்ளுவர் ஒத்துக்கொண்டு, ‘ஒப்புரவறிதல்’ என்ற புதிய-சீர்திருத்த்தைச் சொல்லி, அதன்மூலம் தலைசிறந்த மனிதப்பண்பைக் காட்டுகிறார். பலரோடு கூடிவாழு-ஒத்ததறிந்து வாழு-ஒத்ததறிதல் என்றால் நமக்கு மட்டும் ஒத்ததறிதல் அல்ல-மற்றவர்களுக்கும் ஒத்ததறிதல் என்பதுதான். இந்த ஒப்புரவுப் பண்பு உலகப் பேரிலக்கியங்களால் மிகமிகப் பாராட்டப்படக்கூடிய பண்பு. அது உலகந்தழுவிய வாழ்க்கையையே குறிக்கும்.

பெண்ணின் கடமைபற்றிப் பேசப் புகுந்த வள்ளுவர்,

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

என்று பேசுகிறார். வள்ளுவர் காலத்தில் குடும்ப மகளிரிடம் தெய்வம் தொழுகின்ற உணர்ச்சி மிக்கோங்கி வளர்ந்து, குடும்பப் பொறுப்புக்களில் அக்கறை குறைந்து குடும்ப நலன்கள் பாதிக்கப்படுகிற ஒரு நிலை இருந்திருக்க வேண்டும். அந்நிலையை மாற்றியமைத்துக் குடும்பம் பெண்களுக்கு அவர்களின் கடமையை உணர்த்தவும், குடும்ப நலன்கள் பாதிக்கப்படாமல் காக்கவும் விரும்பியே வள்ளுவர் ‘கொழுநனே தெய்வம்' என்ற சீர்திருத்தத்தை உண்டாக்கினார் என்று கூறலாம் அல்லவா?

அடுத்து,

"தேவர் அனையர் கயவர் அவரும்
மேவன செய்தொழுக லான்”