பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டிக்கிறது. ஏன்? அறிவின் பயனே அன்பு காட்டுதல். அன்பினால் வளர்தலும் வளர்த்தலுமே அறிவினது ஆக்கம் என்று திருக்குறள் பேசுகின்றது.

"சென்றவிடத்துச் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு."

"அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய்
தன்னோய்போல் போற்றாக் கடை"

என்ற குறட்பாக்கள் நினைந்தின்புறத்தக்கன. தமிழக சமய நெறி இவ்விரு சிந்தனைகளின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தது. "நன்றின்பால் உய்ப்பது அறிவு" என்ற திருக்குறள் அடியின் "நன்றுடையானை தீயதிலானை' என்ற திருஞான சம்பந்தர் அருள்வாக்கு ஒப்புநோக்கி உணரத்தக்கது. "அறிவினால் ஆகுவதுண்டோ" என்ற திருக்குறளும் "அன்பே சிவம்" என்ற திருமூலர் வாக்கும் ஒப்புநோக்கி இன்புறத்தக்கன. இன்றைய தமிழர் சமய வாழ்வில் இந்த அன்பும், நன்றும் மீதுர்ந்து வளரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. திருக்குறள் ஓர் அறிவு நூல். முழுதுரிழ் அறநூல். உலகப் பொதுமறை. நேற்றும் இன்றும் என்றும் வாழ்க்கைக்குப் பயன்படும் பொதுமறை. அதன் புகழ் வான்புகழ்.