பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அணிந்து கொள்ள முடியும் தேவை, உளமார்ந்த விருப்பமும் முயற்சியும் தான்!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல மற்றுப் பிற"

என்பது குறள்.

12-9-86
வாழ்வாங்கு வாழ்க!
(2)

இனிய சொற்கள் இன்பத்தைத் தருவன. இனிய சொற்கள் சொல்வாருக்கும் இன்பம் தருவன: கேட்பாருக்கும் இன்பம் தருவன. இன்சொல் தப்பாமல் நட்பைத் தரும்; பெற்ற நட்பை வளர்க்கும்; பாதுகாக்கும். இன்சொல் குறித்த பயனைத் தவறாமல் தரும். பெரும்பான்மையான மனிதர்கள் இன்பத்தை விரும்புகிறார்கள். வளர்ந்த மனிதர்கள் சொற்களைப்பற்றிக் கவலைப்படாமல் பயன் இன்பமாக இருந்தால் சரி என்று கருதுவார்கள். இது பெருந்தகைமையின் பாற்பட்டது. ஆனால் சராசரி மனிதர்கள் பயன் எவ்வளவு இன்பமானதாக இருந்தாலும் சொல் கடுஞ்சொல்லாக இருந்துவிட்டால் மிகுந்த சங்கடப்படுகின்றனர். ஆதலால், நன்மைக்குத்தானே சொல்கிறோம் என்று கடுஞ்சொல்லால் கூறக்கூடாது. எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் நன்மையைக் காணவும் சரி, தீமையை அகற்றவும் சரி இனிய சொற்களையே பேசுதல் உயர்ந்த ஒழுக்கம்.

இனிய சொற்களை வழங்குவதன் மூலம் நல்ல பயன் விளையும். பகைவரையும்கூடத் தன்வயப்படுத்த முடியும். குற்றங்கள் - குறைகள் இல்லாத மானிடர் உலகில் இல்லை. இவற்றைக் கண்டுபிடித்துக் கூறுவதற்காக நமக்கு வாய் படைக்கப்படவில்லை, ஆனால் சமுதாய அளவில் நல்லன வளர வேண்டும் என்ற பெருநோக்கு இருக்குமானால்