பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



219


செய்வதில்லை! ஏன்? தமது சமய - கலைஞானத்தையும் கூட, மற்றவர்களுக்கு வழங்குவ்தில்லை! ஏன் இந்த நிலை?

குடியேறி வாழும் நாடு, எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? கவலற்க! அந்த நாட்டையே தாய்நாடாகக் கருதுக! அங்கேயே வாழ்க! அந்த நாட்டையே உழைத்து வளமுள்ள நாடாக ஆக்குக! அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்க அந்தந்த நாட்டுக் கலை ஞானங்களைக் கற்றுத் தெளிக! நம் மொழியை அந்த நாட்டு மக்களுக்குக் கற்றுத் தருக! நமது கலைஞானங்களை உலக வீதியில் வாழும் மக்களுக்குத் தருக! தமிழர் வாழ்க்கை, கொண்டும் கொடுத்தும் வாழும் வாழ்க்கை; இந்தக் கலை ஞானத்தை ஏன் மரணத்தின் வாயிலில் நிற்கும் வரையிலும் கூடக் கற்றுக் கொள்ளாமல் காலம் கழிக்கிறீர்! பக்கத்தில் உள்ள மனிதருடன் கலந்து பழகாத வாழ்க்கை, மரணத் துன்பத்திலும் கொடிய வாழ்க்கையல்லவா? வேண்டாம், இந்த மரணவேதனை! எல்லா மொழிகளையும் கற்போம்! நமது மொழிகளை மற்றவர் கற்கும்படி செய்வோம்! நாடுகள் பலவாயினும் ஒர் உலகமே! எல்லா ஊர்களும் சொந்த ஊர்களே! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கைமுறை.

உலக வாழ்க்கையில் இந்தத் திருக்குறள் நடைமுறைக்கு வந்துவிட்டால் உலகத்தில் போர் ஏது? மொழிச் சண்டைகள் ஏது? மதச்சண்டைகள் ஏது? இந்தத் திருக்குறளை வாழ்க்கையில் பதிக்கும் நாளிலேயே கெட்ட போரிடும் உலகம் மாயும்! ஓருலகம் தோன்றும்!

"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு."

(397)
வள்ளுவர் வாக்கு (2)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்