பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செல்வம் மற்றவர்களால் கவரப் பெறாத சமுதாயப் பாதுகாப்பும் வேண்டும். சோற்றால் மட்டுமே உயிர்வாழ்வு அமைந்துவிடுவதல்ல. களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; கல்வியும் கலைஞானமும் தேவை; மெய்யுணர்வும் தேவை இவற்றைச் சமுதாயமும் அரசும் உயிர்க்குலத்திற்கு வழங்கவேண்டும். அப்போதுதான் சமுதாயம் வளரும்; வாழும்; இன்பஉலகு அமையும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

(322)

என்ற குறள்நெறி வையகத்தின் வாழ்வு நெறியாக மலர உரிய கடமைகளைச் செய்வோம்! செல்வக் குவியலைத் தவிர்ப்போம்! உடைமையாளராக வாழ்வதைவிட, பலருக்கும் உறவினராக வாழ்வதையே விரும்புவோம்! செல்வத்தைப் பொதுமை செய்வோம்! பலரோடும் கூடிப் பகுத்துக்கொண்டு, உண்பித்தும் உண்டும் மகிழ்வோம்! மகிழ்வுறுத்துவோம்! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கை; அன்பு வாழ்க்கை! அறவாழ்க்கை.