பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாயினமையின் காரணமாகச் சமயநெறியாளர்களுக்குப் பதில் சமயக் கணக்கர்கள் சமுதாயத்தில் தோன்றினர்.

அவர்களும் சமுதாயத்தைப் பண்பியல் வழியில்-அமைதி நெறியில் ‘இவர் தேவர் அவர் தேவர்’ என்று இரண்டாட்டுகின்ற புன்னெறியை வளர்த்தனர். இங்ஙனம் புகழ்பூத்து வாழ்ந்த தமிழனத்தில் வீழ்ச்சியுறும் நிலை தலை காட்டிய பொழுது திருவள்ளுவர் பிறந்தார். இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறெனத் தோன்றினார் திருவள்ளுவர். திருவள்ளுவர் என்ற ஞாயிறு கனன்ற கதிரொளியே திருக்குறள், ஓரினத்தை அழிவு வராமல் பகைப்புலத்தில் காக்கும் போர் வீரனை விட வாழ்வியல் நெறியில் நயத்தக்க நாகரிகத்தினைக் கட்டிக் காப்பாற்றிய வள்ளுவர் போற்றுதற்குரியர். ஏழேழ் பிறப்பும் போற்றுதற்குரியர்; வடபுலம் கண்டு வாகை கொண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றியை விட செந்தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் புகழ் போற்றுதலுக்குரியது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றி ஒரு பொழுதே பகை தடுத்தது. நாவலர் வள்ளுவர் வெற்றி ஊழி ஊழிக் காலத்திற்கு வெற்றி கொண்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றி பகை மட்டுமே தடுத்தது; பண்பினை வளர்க்கப் பயன்படவில்லை, திருவள்ளுவர் செய்த திருக்குறளோ நந்தமிழ் நெறியினை நஞ்சனைய நெறியின் கலப்பினின்று தடுத்துக் காப்பாற்றியது. நமது சமுதாயத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழிநடத்தியதன் மூலம் பண்பியலையும் பேணிக் காத்து வந்திருக்கின்றது.

வள்ளுவம் வையகத்து வரலாற்றின் சந்திப்பில் பிறந்தது; வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பிறந்தது; தேங்கிக் கிடந்த சமுதாயத்தில் தெளிவு காணப் பிறந்தது; நூல்கள் பல கற்பதிலும் நுண்ணிய அறிவு ஆற்றலுடையதெனக் காட்டப் பிறந்தது. கல்வி, கற்கின்ற ஆற்றல்ைப் பொறுத்ததல்ல, கசடு அறுத்தலிலேயே இருக்கிறது. என்று உணர்த்தப் பிறந்தது;